உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு

அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் 1969ஆம் ஆண்டு முதல் தமிழிலக்கிய வரலாறு நூற்றாண்டு வரிசை எனும் தொகுதிகளை வெளியிடத் தொடங்கினார். இதற்கு முன் தண்டபாணி தேசிகர், பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்று நூல்களை வெளியிட்டுள்ளார். இம்மரபில் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் உருவாக்கியதே பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாறு என்னும் நூல். இத்தொகுதியில் அந்நூல் இடம்பெற்றுள்ளது. கிறித்துவமும் தமிழும் எனும் நூலை (1936) தமது முதல் நூலாக மயிலை சீனி. வேங்கடசாமி வெளியிட்டுள்ளார். அந்நூலில் தமிழின் அச்சு மரபு உருவான வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அச்சுவழி புதிது புதிதாக உருவாக்கப்படும் நூல்கள் குறித்து இவர் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன் விளைவாகவே இந்நூல் உருப்பெற்றுள்ளது என்று கூறமுடியும்.

தமிழர்களின் எழுத்துப்பதிவு மரபு, எழுத்துப் பயிற்சி மரபு ஆகியவை அச்சு மரபு வருவதற்கு முன் வேறுவகையில் செயல்பட்டது. ஆனால் அச்சுமரபு வந்தவுடன் அதன் தன்மை மாறத் தொடங்கியது. இந்நூலில் இவ்விரு கூறுகளையும் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற எழுத்துப் பயிற்சி என்பது எவ்வகையில் அமைந்திருந்தது