உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

89

இதனால், சில பரணி நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்து பின்னர் அழிந்துவிட்டன என்பது தெரிகின்றது.

8. வீரமாலை

வீரமாலை என்னும் நூலைப் புலவர் பாண்டி கவிராசர் என்பவர் இயற்றினார் என்னும் செய்தி, புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல் லெழுத்துச் சாசனத்தினால் தெரிகிறது. இந்தச் சாசனம். புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகா, ராங்கியம் என்னும் ஊரில் உள்ள பூமீசுவரர் கோவிலின் தென்புறச் சுவரில் இருக்கிறது. இந்தச் சாசனத்தின் வாசகம் இது.

“ரொத்திரி வருஷம் தைய் மாதம் 302 ஸ்ரீமது வெங்கள நாயாக் கரய்யன் காரியத்துக்கு கர்த்தரான தீத்தாரியப்பரும் பொன்னமராபதி நாட்டுத் தென்பற்று இராசிமங்கலம் ஊரவரும் புலவர் பாண்டி கவிராசர் வீரமாலை பாடுகையில் இவற்கு இறையிலியாக விட்ட நிலம் மறவனேறி வயலில் வெம்படிப் புலவர் செய் அஞ்சாள் நடுகையும் சந்திராதித்தர் வரைக்குபற்றி அனுபவிக்க கடவராகவும் இதுக்கு யாதா மொருத்தர் இதுக்கு இரண்டு நினைத்தவன் கெங்கைக் கரையிலே காராம்பசுவைக் கொன்ற தோசத்திலே போகக் கடவராகவும். இப்படிக்கு ஏறக் குடையான் ஆன பொய்சொல்லா மெய்யன் எழுத்து.

9946

இந்தச் சாசனத்தினால், வெங்கள நாயக்கரய்யன் மீது இந்த வீரமாலை பாடப்பட்டது என்பது தெரிகிறது. வெள்ள நாயக்கர் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்று தெரிகிறபடியால், இந்நூல் அக்காலத்தில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. 9. பேர்வஞ்சி

புதுக்கோட்டை, திருமய்யம் தாலூகா, பொன்னமராபதி என்னும் ஊரில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் சாசனம் ஒன்று பேர்வஞ்சி என்னும் நூலைக் குறிப்பிடுகிறது. மறமாணிக்கர் என்னும் வீரர்களின் சிறப்பை, திருவரங்குள முடையான் என்னும் புலவர் பேர்வஞ்சி என்னும் நூலில் பாடினார் என்றும், அந்நூலை அரங்கேற்றக் கேட்டு மகிழ்ந்த வீரர்கள் இப்புலவருக்கு மறச்சக்கரவர்த்திப் பிள்ளை என்னும் சிறப்புப் பெயரைக் கொடுத்து, தூத்துக்குடியில் நன்செய் புன்செய் நிலங்களைப் பரிசிலாக வழங்கினார்கள் என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. இந்தச் சாசனத்தின் வாசகம். வருமாறு: