உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய நூல்கள்

1. பழைய இராமாயணம்

III. காவியம்

அகவற்பாவினால் இயற்றப்பட்ட பழைய இராமயணம் ஒன்று இருந்ததென்பது, ஆசிரியமாலை என்னும் தொகை நூலிலிருந்து தெரிகிறது. ஆசிரியமாலை, ஆசிரியப் பாக்களினால் ஆன நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுளைக் கொண்ட நூல். ஆசிரிய மாலையும் இறந்துபோன நூலே. அதிலிருந்து சில செய்யுள்களைப் புறத்திரட்டு என்னும் தொகைநூலில் சேர்த்துள்ளனர்.

ஆசிரியமாலையில் தொகுக்கப்பட்டிருந்த பழைய இராமாயணச் செய்யுள்களில் ஐந்து செய்யுள்கள் புறத்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே தருகிறேன்:

66

“மாமுது தாதை யேவலி னூர்துறந்து

கானுறை வாழ்க்கையிற் கலந்த விராமன் மாஅ விரலை வேட்டம் போகித்

தலைமகட் பிரிந்த தனிமையன் றனாது

சுற்றமுஞ் சேணிடை யதுவே முற்றியது

நஞ்சுகறை படுத்த புன்மிடற் நிறைவ

னுலகுபொதி யுருவமொடு தொகைஇத் தலைநாள்

வெண்கோட்டுக் குன்ற மெடுத்த மீளி

வன்றோ ளாண்டகை யூரே யன்றே

சொன்முறை மறந்தனம் வாழி வில்லு முண்டவற் கந்நா ளாங்கே.

மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்

நீலக் குவளை நிறனும் பாழ்பட

இலங்கை யகழி மூன்று மரக்கியர்

கருங்கா னெடுமழைக் கண்ணும் விளிம்பழிந்து

பெருநீ ருகுத்தன மாதோ வதுவக்

குரங்குதொழி லாண்ட விராமன்

அலங்குதட றொள்வா ளகன்ற ஞான்றே.

1

2