உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

66

“கடலு மலையுந் நேர்படக் கிடந்த

மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினு நொய்தா லம்ம தானே யிஃதெவன்

குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை யிராமன் தம்பி யாங்கவ

னடிபொறை யாற்றி னல்லது

முடிபொறை யாற்றலன் படிபொறை குறித்தே.”

97

6

இச்செய்யுளை நச்சினார்க்கினியர், தொல். பொருள். புறத்திணை, 21 ‘கட்டில் நீத்த பால்' என்பதன் உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

2. ஜைன இராமாயணம்

தமிழில் செய்யுள் நடையில் இயற்றப்பட்ட ஜைன இராமாயண நூல் ஒன்று இருந்தது. அந்த நூல் இப்போது இறந்துவிட்டது. ஆனால், அந்த நூலிலிருந்து சில செய்யுள்களை ஸ்ரீபுராண ஆசிரியர் தமது ஸ்ரீ புராணத் தில் (முநிஸுவ் ரத சுவாமி புராணத்தில்) மேற் கோள் காட்டியிருக்கிறார்.

முநிஸுவ்ரத சுவாமி என்னும் 20ஆவது தீர்த்தங்கரர் வாழ்ந் திருந்த காலத்தில், பலதேவ வசுதேவர்கள் இராம லக்ஷ்மணர்களாகவும், பிரதி வசுதேவர் இராவணனாகவும். பிறந்து தம்முள் போர்செய்த வரலாற்றைக் கூறுவது ஜைன இராமாயணமாகும்.

வால்மீகி இராமாயணத்துக்கும் ஜைன இராமாயணத்துக்கும் கதைப் போக்கில் சில வேறுபாடுகள் உண்டு. அவற்றில் முக்கிய மானவை: இராமனை ஒருவரும் 14 ஆண்டு காட்டுக்கு அனுப்பவில்லை: தசரதன் இறந்துவிடவில்லை. இராமனும் சீதையும் தாங்களாகவே இயற்கைக் காட்சியைக் காணச் சித்திரகூடம் என்னும் காட்டில் சென்றிருந்தபோது இராவணன் சீதையைச் சிறைப்படுத்தினான். சூர்ப்பனகை என்பவள் இராவணனுடைய தங்கையல்லள்: இராவணனுடைய பணிப் பெண்களில் ஒருத்தி. சூர்ப்பனகையை இலக்குமணன் மூக்கை அரிய வில்லை. இராமன் வாலியை மறைந்து கொல்லவில்லை. வாலி, போர்க் களத்தில் இலக்குமணனாலேயே கொல்லப்பட்டான். இவ்வாறு ஜைன இராமா யணம் கூறுகிறது.

இனி, முநிஸுவ்ரத சுவாமி புராணத்தில் கூறப்படுகிற ஜைன இராமாயணத்தின் சில விஷயங்களை இங்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். அவை என்னவென்றால்: