உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

இறந்தது காரணமே வில்லதனாற் பிறப்பில்லை இறந்தின்று காரணமே லியைந்துள தென்றாளா விறந்ததற்கும் பிறந்ததற்கும் காலமொன் றாதலைச் சிறிதுணர்வு முறக்கத்தின் றீர்வுமே யுரையாதோ.

119

10

சமண சமயக் கொள்கைகளை மறுப்பதற்காகவே குண்டலகேசி என்னும் பௌத்தக் காவியம் இயற்றப்பட்டது. குண்டலகேசியில் மறுத்துக் கூறப் பட்ட சமண சமயக் கொள்கைகளை மறுத்துத் தமது சமண சமயக் கொள் கைகளை நிலைநாட்டுவதற்காக நீலகேசி என்னும் சமண சமய நூல் பிற்காலத்தில் உண்டாக்கப்பட்டது. நீலகேசி, மொக்கலவாதச் சருக்கதத் தில், குண்டலகேசிச் செய்யுள்கள் மறுக்கப்படுகின்றன. அவ்வாறு மறுக்கப்படுகிற குண்டலகேசிச் செய்யுள்களின் முதலடியின் முதற் சொற்களும் சொற்றொடர்களும் உரையாசிரியரால் தரப்படுகின்றன. இதிலிருந்து குண்டலகேசிச் செய்யுள்களின் முதற்சொற்களையும் சொற்றொடர்களையும் அறியலாம். அவற்றைக் கீழே தருகிறேன்:-

1. கருத்தினாற் பெற்றோமோ. 2. உடம்பளவிற்றுயிர். 3. பழுதை யாற் பாம்புண்டு. 4. கலப்பாடி. 5. எழும் பயிற்றி. 6. காலினாற் சுமந்துய் யப்பான். 7. மக்கட்பண் பழியாது. 8. இயற்றியவுடம்பு. 9. வினைநிற்க பயன். 10. தொல்லைக்கட் செய்யப்பட்ட. 11. அடுப்புத் துடைப்பம். 12. துடிக்கும் வண்ணத் தின்மையிலுயிர்களை. 13. துன்பந் தீவினையின் பயன். 14. நின்ற துன்பம். 15. ஓம்பல் வேட்கை. 16. போக வேட்கை. 17. வாயினல் வேட்கை களைவான். 18. தீவினையின் பயன் றுய்ப்பல். 19. கொல்லா வேட்கை. 20. பூமைத்தாள். 21. காமங்கூர். 22. துன்னவூசி. 23. பொய்யை யஞ்சியுரையாமை. 24. இவ்விடத் தோரலைக் கோட்சிறை. 25. இந்நிலத்துப் புகுந்திலன். 26. கோறலை யஞ்சி. 27. கொன்று தின்னான். 28. வாலிதி னூனூண். 28. புய்ந்துக்க பீலி. 29. ஊன்விற்ப கொள்வ. 30. விலைக்குக் கொள்வானை.

31. செய்வினை கொடுத்தார் நிற்ப. 32. விலைக்கு விற்பான் செய்ய வஞ்சமும் வேண்டி, விலைக்குக் கொள்வானே படவிதியாயோ. 33. செய்யவிலை கொடுத்தான். 34. பூவினைக் காட்டலென். 35. தின்ற புலால் கொலை நேர்விக்கும். 36. சுக்கில சோணிதம். 37. உள்ளங் கொள்ள. 38. ஓதின வுண்பராலது நன்னெறி. 39. ஜிவன் பரிணிமித்தம் 40. ஒழிந்தபடை பதித்தலென். 41. பேய்பெற்ற தாய்ப்பற்று. 42. காயந்தனை வருத்தல் தவமென்பாய். 43. வெயிலு ணிற்றல். 44. துன்பம்