உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

உண்டியுட் காப்புண் டுறுபொருட் காப்புண்டு கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே.

எத்துணை யாற்று ளிடுமணல் நீர்த்துளி புற்பணி யுக்க மரத்திலை நுண்மயிர் அத்துணை யும்பிற ரஞ்சொலி னார்மனம் புக்கன மென்று பொதியறைப் பட்டார்.

தளிப்பெயற் றண்டுளி தாமரை யின்மேல் வளிப்பெறு மாத்திரை நின்றற் றொருவன் அளிப்பவற் காணுஞ் சிறுவரை யல்லால் துளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார்.

பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமை மேவத் துறையிலா வசன வாவி துகிலிலாக் கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.

10ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலைநகரத் துய்ப்பிக்கும் காக்கப் படுவன விந்திரிய மைந்தினும் நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே.

தாரம் நல்லிதந் தாங்கித் தலைநின்மின் ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை வீர வென்றி விறல்மிகு விண்ணவர் சீரின் ஏத்திச் சிறப்பெதிர் கொள்பவே.

123

5

6

7

00

9

10

பெண்ணி னாகிய பேரஞர் பூமியுள் எண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்

பின்னி நின்ற பெருவினை மேல்வரும் என்ன தாயினும் ஏதில்பெண் ணீக்குமின்.

11

பொய்யன் மின்புறங் கூறன்மின் யாரையும் வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்

உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாட் செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்.

12