உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

கள்ளன் மின்கள வாயின யாவையும்

கொள்ளன் மீன்கொலை கூடி வருமறம்

எள்ளன் மின்னில ரென்றெண்ணி யாரையும்

நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.

13

துற்றள வாகத் தொகுத்து விரல்வைத்த தெற்றுக்கஃ தென்னி னிதுவதன் காரணம் அற்றமில் தானம் எனைப்பல வாயினுந் துற்றவி ழொவ்வாத் துணிவென்னு மாறே. ஆற்று மின்னருள் ஆருயிர் மாட்டெலாம் தூற்று மின்னறந் தோம்நனி துன்னன்மின் மாற்று மின்கழி மாயமும் மானமும் போற்று மின்பொரு ளாவிவை கொண்டுநீர்.

பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா தருளைப் பொருளா வறஞ்செய்தல் வேண்டும் அருளைப் பொருளா வறஞ்செய்து வான்கண் இருளியல் பெய்தாத தென்னோ நமரங்காள்.

தகாதுயிர் கொல்வானின் மிகாமையிலை பாவம் அவாவிலையி லுண்பான் புலால்பெருகல் வேண்டும் புகாவலை விலங்காய்ப் பொறாதுபிற வூன்கொன் றவாவிலையில் விற்பானு மாண்டருகல் வேண்டும்.

பிறவிக் கடலகத் தாராய்ந் துணரின்

14

15

16

17

தெறுவதிற் குற்ற மிலார்களு மில்லை

அறவகை யோரா விடக்கு மிசைவோர்

குறைவின்றித் தஞ்சுற்றந் தின்றன ராவர்.

18

உயிர்க ளோம்புமி னூன்விழைந் துண்ணன்மின்

செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்தொரீஇக்

கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு

மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர்.

19

பொருளொடு போகம் புணர்தல் உறினும் அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின் இருளில் கதிச்சென் றினியிவண் வாரீர் தெருள லுறினுந் தெருண்மி னதுவே.

20