உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

129

கரணம் பலசெய்து கையுற் றவர்கட்

கரண மெனுமில ராற்றிற் கலந்து

திரணி யுபாயத்திற் றிரண்பொருள் கோடற் கரணி ஞெலிகோ லமைவர வொப்ப.

53

நாடொறு நாடொறு நந்திய காதலை நாடொறு நாடொறு நைய வொழுகலின் நடடொறு நடடொறு நந்தி யுயர்வெய்தி நடடொறுந் தேயும் நகைமதி யொப்ப.

54

வனப்பில ராயினும் வன்மையி லோரை

நினைத்தவர் மேவர நிற்பமைக் காவர்தாங்

கனைத்துடன் வண்டொடு தேனின மார்ப்பப் புனத்திடைப் பூத்த பூங்கொடி யொப்ப.

55

தங்கட் பிறந்த கழியன்பி னார்களை வண்கண்மை செய்து வலிய விடுதலின் இன்பொரு ளேற்றி யெழநின்ற வாணிகர்க் கங்கட் பரப்பகத் தாழ்கல மொப்ப.

ஒத்த பொருளா னுறுதிசெய் வார்களை யெத்திறத் தானும் வழிபட் டொழுகலிற் பைத்தர வல்குற்பொற் பாவையி னல்லவர் பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.

வீபொரு ளானை யகன்று பிறனுமோர்

56

57

மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின் மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு மாவும் புரைப மலரன்ன கண்ணார்.

58

நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்

நன்குடை யானை நயந்தனர் கோடலின்

வம்பிள மென்முலை வாணெடுங் கண்ணவர் கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.

59

முருக்கலர் போற்சிவத் தொள்ளிய ரேனும்

பருக்கர டில்லவர் பக்க நினையார்

அருப்பிள மென்முலை யஞ்சொ லவர்தாம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.

60