உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

கெட்டேம் இதுவெந் நிலையென்று சார்தற்கண்

நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்

பெட்டது சொல்லிப் பெரிதிகழ்ந் தாற்றவும்

எட்டவந் தோரிடத் தேகி நிற்பவே.

தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட எண்ணெய்கொண் டீட்டற் கிவறுத லென்னொக்கும் பெண்மனம் பேதித் தொருப்படுப்பெ னென்னும் எண்ணில் ஒருவன் இயல்பெண்ணு மாறே.

நீண்முகை கையாற் கிழித்தது மொக்குறு மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற் பேணலு மன்பும் பிறந்துழிப் பேதுசெய் தாணைப்பெண் ணைய வணைக்குறு மாறே.

அந்தகன் அந்தகற் காறு சொலலொக்கும் முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவதும் நன்கறி வில்லான் அதுவறி யாதவற் கின்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே.

யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப் பாறொடு பத்தினி மாபோ லொழுகென்று

45

46

47

48

கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை

வேறோ ரிடத்து வெளிப்பட நன்றாம்.

49

ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று

பாயிர மின்றிப் பயிற்றி மொழிந்தனள்

மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி

யாவ ரடைந்தவர்க் கவையும் புரைப.

50

வாரி பெருகப் பெருகிய காதலை

வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்

மாரி பெருகப் பெருகி யறவறும்

வார்புன லாற்றின் வகையும் புரைப.

51

எங்ஙன மாகிய திப்பொரு ளப்பொருட்

கங்ஙன மாகிய வன்பின ராதலின்

எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்

கங்ஙனம் ஆகிய யாழும் புரைப.

52