உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

127

இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல வளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும் விளைநில முழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.

37

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க் குடம்பு மிகையவை யுள்வழிப்

பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்

அற்றா யுழலு மறுத்தற் கரிதே.

38

உற்ற வுதிர மொழிப்பான் கலிங்கத்தை

மற்றது தோய்த்துக் கழுவுத லென்னொக்கும்

பற்றினா னாகிய பாவத்தை மீட்டும்

பற்றொடு நின்று பறைக்குறும் ஆறே.

39

தானம் செய்திலம் தவமும் அன்னதே

கானந் தோய்நில விற்கழி வெய்தினம்

நானந் தோய்குழல் நமக்குய்த லுண்டோ

மானந்தீர் கொள்கையார் மாற்றம்பொய் யல்லவால்.

40

பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி

ஒருவந்த முள்ளத் துவத்த லொழிமின்

வெருவந்த துன்பம் விடுக்குந் திறலோன்

ஒருவன் உலகிற் குளனென்னு மாறே.

41

உய்த்தொன்றி யேர்தந் துழவுழுது ஆற்றவும்

வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்னொக்கும்

மெய்த்தவ மில்லான் பொருளொடு போகங்கட்

கெய்த்துழந் தேதான் இடர்ப்படு மாறே.

42

செந்நெலங் கரும்பினொ டிகலுந் தீஞ்சுவைக்

கன்னல் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும் இன்னவை காண்கிலன் என்று பூகமும்

முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே.

43

குலந்தருங் கல்வி கொணர்ந்து முடிக்கும்

அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்

நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்

புலம்பில் பொருடரப் புன்கண்மை யுண்டோ.

44