உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

கல்வி யின்மையும் கைப்பொருள் போகலும்

நல்லில் செல்லல்க ளானலி வுண்மையும்

பொய்யில் பொய்யொடு கூடுதற் காகுதல்

ஐய மில்லை யதுகடிந் தோம்புமின்.

உலகுடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின் நிலையில்கதி நான்கினிடை நின்றுதடுமாறும் அலகில்துய ரஞ்சினுயி ரஞ்சவரும் வஞ்சக் கொலையொழிமி னென்றுநனி கூறின ரறிந்தார்.

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங் கள்வரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும் உள்ளி லுறுபொருளை யொட்டா தொழிந்தவர் எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வ மிகப்பவே.

29

30

31

ஒழிந்த பிறவற னுண்டென்பா ருட்க வழிந்து பிறரவாம் வம்பப் பொருளை இழந்து சிறிதானு மெய்தா தொழிந்தார் அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப் பிலரே.

32

இன்மை யிளிவாம் உடைமை யுயிர்க்கச்சம் மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்

புன்மை யுறுக்கும் புரையி லரும் பொருளைத்

துன்னா தொழிந்தார் துறவோ விழுமிதே.

33

ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி

நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்

மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை

வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே.

34

இல்லெனின் வாழ்க்கையு மில்லையுண் டாய்விடிற்

கொல்வர் கயவர் கொளப்படும் வீடுவர்

இல்லையுண் டாய்விடி னிம்மை மறுமைக்கும்

புல்லென்று காட்டும் புணர்வது மன்றே.

35

வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக்

கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுழையதா

நாற்ப திகந்தாம் நரைத்தூதும் வந்ததினி

நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே.

36