உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

165

துணுக்குற்றது. அப்போது அரசனுடைய மனத்திலே நிலையாமை நன்கு விளங்கியது. இதுபோலவே தனது வாழ்க்கையும் அரசபதவியும் நிலையற்றன என்பதையும், இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையற்றவை என்பதையும் உணர்ந்தான். அப்போதே அரசாட்சியைத் துறந்து, துறவு பூண்டு ஸ்ரீதர முனிவரிடத்தில் தீக்கை பெற்று, தவம் செய்து கடைசியில் இந்திரபதவியடைந்தான்.

இந்திர பதவியை யடைந்த அரசன், பிறகு மண்ணுலகத்திலே வங்க நாட்டு மிதிலாபுரத்தின் அரசனான கும்பன் என்வனுக்கு மகனாய்ப் பிறந்தான். பிறந்து, மல்லிநாதர் என்னும் பெயருடன் வளர்ந்து, பிறகு துறவு பூண்டு தீர்த்தங்கரர் பதவியை யடைந்து, சமண சமயத்தை உலகத்திலே பரவச் செய்து, பிறகு வீடு பேறடைந்தார்.

இந்த மல்லிநாதர் சரிதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூல் முற்காலத்தில் செய்யுளாக இயற்றப்பட்டிருந்தது. அந்த நூலுக்கு என்ன பெயர் இருந்தது என்பது தெரியவில்லை. 'மல்லி நாதர் புராணம்' என்னும் பெயரே இருந்திருக்கக்கூடும். அந்நூல் இப்போது மறைந்து விட்டது. அந்நூலிலிருந்து இரண்டு செய்யுட் பகுதிகள் ஸ்ரீபுராணத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்று கூறினோம். அவை கீழே தரப்படுகின்றன:

66

'வாயில் மாடமும் மதிலும் அமைத்துக்

காவ லாளரிற் காப்பு நடுபடுத்

தரிதினிற் போகி யடவியினி லாடல்

மருவியது விடுத்து மறித்துமந் நெறியே.

இச்செய்யுட் பகுதி, வைசிரவண அரசன் ஆலமரத்திற்குச் சிறப்புச் செய்ததைக் கூறுகிறது.

66

இதுஇதற் குற்ற திறைவ என்றலும் கதுமென மனநனி கலங்கின னாகி

வெடிப்பட முழக்கத் திடியுரு மேற்றிற் பொடிப்பொடி யாகியது பொன்றினமை கண்டு நெடிது நினைந்து நெஞ்சு கலுழ்வெய்தி இருவினைப் பயத்திற் றிரிதரும் உயிர்கட்

கருவலி யுடைமையும் ஆண்மையும் அழகும் திருமலி செல்வமும் தேசும் வென்றியும்