உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

105

ஆண்டுகளுக்கு முன்னே படித்தேன். இப்போது அந்த நூல் கிடைக்காதபடியால் அவர் காட்டிய மாறுபாடுகளை எடுத்துக் காட்ட இயலவில்லை.

ஜைன ஆசிரியர் இயற்றிய சூடாமணி நிகண்டை அச்சிட்ட ஒரு சைவர் அதில் சில செய்யுட்களை மாற்றி அமைத்து விட்டாராம். இது பற்றிக் காஞ்சீபுரம் தி. அநந்நாத நயினார் என்னும் ஜைனர் தாம் எழுதிய 'திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும்' என்னும் நூலிலே 132-ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "தவிர மண்டல புருடர், சூடாமணி நிகண்டு தெய்வப் பெயர்த் தொகுதியில் அருகன் எண்குணத்தான்’ எண் குணங்களில் ஒவ்வொன்றன் நாமத்தினையும் தனித்தனியாகவும் கூறியிருக்கின்றார். இவற்றைப் பழைய ஏட்டுப் பிரதிகளிலும், 50,60 வருஷங்களுக்கு முன் பலர் அச்சிட்டிருக்கும் புத்தகங்களிலும் காணலாம். சிவபெருமானுக்கு இது சம்பந்தமான விஷயங்கள், அந்தத் தெய்வப் பெயர்த் தொகுதியிலும், 12-ஆவது தொகுதியிலும் சொல்லப்படவில்லை. இவை

அனாகவித்துவாம்சர்கள் நன்கு அறிந்த விஷயங்கள். பிற்காலத்தில், சில மத துவேஷமுடைய வித்வான்கள் சூடாமணி நிகண்டு 12-வது தொகுதியில் சிவபிரானுக்கும் எண்குண முண்டென்பதனைப் புகுத்தி இரண்டு போலிச் செய்யுட்களை இயற்றித் தாங்கள் அச்சிட்ட புத்தகங்களில் சேர்த்திருப்பதுவும் தவிர, ஏட்டுப் பிரதிகளிலும் பழைய அச்சுப் பிரதிகளிலும் உள்ள பழைய செய்யுட்களை நீக்கியும் தாங்களி யற்றிய வேறு சில புதிய செய்யுட்களைச் சேர்த்தும் ய மாறுபாடுகளைச் செய்திருக்கின்றார்கள். திவாகரம் பிங்கலர் நிகண்டு முதலியவற்றிலும் இத்தன்மையாகவே சில மாறுபாடுகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள்.

99

பல

எண்சுவடிகளின் தொடக்கத்தில் இருந்த அருகக் கடவுள் வணக்கத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக யானைமுகன் வணக்கத் தைப் புதிதாகச் சேர்த்து அச்சிட்டதும் உண்டு.

இவ்வாறு அச்சிற்பதிப்பித்த சில நூல்களிலே சில பதிப்பாசிரியர் சில மாறுபாடுகளைச் செய்திருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும். புத்தகப் பட்டியல்

ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழந்தமிழ் நூல்கள் சென்ற ஆண்டில் 19-ஆம் நூற்றாண்டிலே முதன் முதலாக அச்சுப்