உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

காப்பாற்றப்பட்டன. எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்ணக்கு, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய சங்க நூல்களும் பிற்கால நூல்களும் மறைந்து போயிருக்குமானால், தமிழனுக்கு இலக்கியச் செல்வமும் கலைச்செல்வமும் சரித்திரச் செல்வமும் வேறு என்ன எஞ்சியிருக்க முடியும்? அழிந்து போகும் நிலையிலிருந்த இந்த நூல்கள் 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த சேலம் இராமசாமி முதலியார் போன்ற நல்லறிஞர்களின் நன் முயற்சியினால் காப்பாற்றப்பட்டன. அந்தப் பெரியவர்களுக்குத் தமிழுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. மாறுபாடு

ஏட்டுப் பிரதியாக இருந்த பழைய நூல்களை அச்சிற்பதிப் பித்தவர்களில் சிலர், தாம் அச்சிட்டு நூல்களில் மாறுபாடுகளையும் செய்திருக்கிறார்கள். இருந்ததை இருந்தபடியே மாறுபாடு செய்யாமல் அச்சிற் பதிக்க வேண்டியது பதிப்பாசிரியர் கடமை. ஆனால், சில பதிப்பாசிரியர்கள் மதப்பற்றுக் காரணமாகத் தாம் அச்சிட்ட நூல்களில் மாறுபாடுகள் செய்தும் அச்சிட்டிருக்கிறார்கள். பழைய ஆசிரியர்கள், சமயக் காழ்ப்பு இல்லாமல், காய்தல் உவத்தல் இன்றி, அந்தந்த இடத்துக்கு ஏற்பச் சிவனுக்கும் திருமாலுக்கும் ஏற்றந் தந்து செய்யுள் இயற்றினார்கள். அந்த நூல்களைப் பிற்காலத்தில் அச்சிட்ட பதிப்பாசிரியர்கள் தம் மதக்கொள்கைக்கு ஏற்ப அந்தச் செய்யுள்களை மாற்றி அமைத்து அச்சிட்டு வெளிப் படுத்தினார்கள்.

கம்ப ராமாயணத்தை 19-ஆம் நூற்றாண்டில் அச்சிட்ட வைணவர் ஒருவர் பழைய பாடத்தை மாற்றித்தமது கருத்துக்கு ஏற்பப் புதிய பாடத்தைப் புகுத்தி அச்சிட்டார். அவர் செய்த மாறு பாட்டைத் தொழுவூர் வேலாயுத முதலியார் ஓர் இடத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் சுட்டிக் காட்டியதை இந்நூல் ஒழிபியலில் ‘கம்ப இராமாயணம்' என்னும் தலைப்பில் காட்டியுள்ளேன்.

அவ்வாறே, சென்ற நூற்றாண்டிலே மகாபாரதத்தை அச்சிற் பதிப்பித்த மற்றொரு வைணவர், சிவபெருமானுக்கு ஏற்றங் கூறுகிற செய்யுட்களை மாற்றி அச்சிற்பதிப்பித்தார். அவர் செயலைக் கண்டித்துச் சென்ற நூற்றாண்டில் இருந்த சைவப் புலவரான சூளை சோம சுந்தர நாயகர் அவர்கள் தாம் எழுதிய ஒரு நூலில் எழுதியிருக் கிறார். அதில் அந்த வைணவர் செய்துள்ள மாறுபாடுகளையும் பழைய செய்யுள்களையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். அதை நான் சில