உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

நூல்களைப்

-

பத்தொன்பதாம் நூற்றாண்டு

103

போற்றிப் பாதுகாவாமல் அழிய விட்டனர். இக்காரணத்தினாலே பௌத்த, சமணர்கள் இயற்றி வைத்த சிறந்த தமிழ் நூல்கள் பல அழிந்து மறைந்து விட்டன. பௌத்த சமண மதங்களை அழித்து வெற்றி கொண்ட சைவ வைணவர்கள், பிற்காலத்திலே தமக்குள் சமயப் பூசல்களை வளர்த்துக் கொண்டனர். அது காரணமாகச் சைவர்கள் தங்கள் சைவ சமய நூல்களை மட்டும் படிப்பதும் வைணவ சமய நூல்களைப் படியாமலிருப்பதும் வழக்கமாயிற்று. அதுபோன்று, வைணவர்களும் தங்கள் வைணவ சமய நூல்களைப் படிப்பதும் சைவ சமய நூல்களைப் படியாமலிருப்பதும் வழக்கமாயிற்று. எஞ்சியிருந்த சிறு தொகையினரான சமணர்களும் தமது சமய நூல்களைப் படிப்பதல்லாமல் மற்றச் சமய நூல்களைப் படிப்பது இல்லை.

இதற்குப் புறனடையாகச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி முதலிய சில நூல்கள், பல புலவர்களால் சமய வேறுபாடு இல்லாமல் படிக்கப்பட்டன. இந்நூல்கள் சமண பௌத்த நூல்களாக இருந்தாலும் இலக்கியச் சுவை நிரம்பிய காவிய நூல்களான படியினாலே இவற்றை எல்லா மதத்தாரும் படித்து வந்தனர். அப்படிப் படித்தவர்கள் பெரும் புலமை வாய்ந்த சிலரே.

நல்ல காலம்

சமயக் காழ்ப்புக்கு இடமில்லாத சங்க நூல்கள். 18-ஆம் நூற்றாண்டு வரையில் புலவர்களாலும், உயர்தரக் கல்வி கற்கும் மாணவர்களாலும் பயிலப்பட்டன. ஆனால், 18-ஆம் நூற்றாண்டில் ஒரு புதிய கருத்துத் தோன்றிச் சங்க நூல்களையும் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய சங்ககாலத்து நூல்களையும் படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டது. சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல் களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும் வீணர்கள் என்றும், பயனில் சொல்ல பாராட்டும் பதடிகள் என்றும் குறை கூறப்பட்டனர்.

(இதுபற்றி, 'சமயக் காழ்ப்பு' என்னும் தலைப்பில் கூறினோம் ஆதலின் இங்கு மீண்டும் கூற முற்படவில்லை.)

நல்ல காலமாக, அந்தக் காலத்தில் பொது நோக்கமும் பரந்த மனப்பான்மையும் உள்ள பெரியவர்கள் சிலர் இருந்த காரணத் தினாலே, சங்க நூல்களும் மற்ற நூல்களும் அழிந்து போகாமல்