உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

109

படித்து மனப்பாடஞ் செய்தார்கள். அதன் பிறகு சதகங்கள் நிகண்டுகள் சிறு பிரபந்த நூல்கள் முதலியவற்றைப் படித்தார்கள். இந்நூல்களும் வசனமாக இல்லாமல் பாட்டாகவே இருந்தன.

புது முயற்சி

19-ஆம் ம் நூற்றாண்டிலே ஐரோப்பா முதலிய மேல் நாடு களிலிருந்து பாதிரிமார்களும் மிஷன் சங்கங்களும் வந்து நமது நாட்டிலே கிறிஸ்துமதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்கள். அவர்கள் பாடசாலைகளை அமைத்து ஐரோப்பிய முறைப்படிப் பாடங்களைக் கற்பித்தபோது, பழைய பாடமுறைகள் மாற்றப்பட்டுப் புதிய முறைகள் புகுத்தப்பட்டன. வசன பாடப் புத்தகங்களும் சரித்திரம் பூகோளம் முதலிய பாடப் புத்தகங்களும் புதிதாக இடம் பெற்றன. வகுப்புகளுக்கு ஏற்ற முறையில் வசன பாடங்கள் அமைக்கப்பட்டன. மேலும், கிறிஸ்துமத நூல்களை மக்கள் எளிதில் படிக்கத்தக்கபடி வசன நூல்களாக எழுதி வெளியிட்டார்கள். பாடசாலையிலும் வெளியிலும் மாணவர்களும் மற்றவரும் வசன நூல்களைப் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலை ஏற்படுவதற்கு முன்பு நமது நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் எல்லாம் பாட்டாகவும் சூத்திரங்களாகவும் எழுதப்பட்டி ருந்தன. சமய நூல்கள், வைத்தியம், சோதிடம், நிகண்டு, சிற்பக்கலை முதலிய எல்லாம் பாட்டாகவே அமைந்திருந்தன.

19-ஆம் நூற்றாண்டிலே ஐரோப்பிய மிஷனரிமாரும் பாதிரி மாரும் நமது நாட்டில் சுறுசுறுப்பாகச் செய்து வந்த கிறிஸ்து மதப் பிரசாரத்தின் காரணமாக வசன நூல்கள் வளர்ச்சி பெற்றன என்பது குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்ச்சியாகும். வசன நூல்கள் மலிந்துள்ள இந்தக் காலத்திலே, வசன நூல்களின் முதன்மையையும் இன்றியமை யாமையையும் நாம் இப்போது நன்றாக உணர்ந்து கொள்வது இல்லை. ஆனால் 19-ஆம் நூற்றாண்டிலே, படிப்பதற்கு வசன நூல்கள் இல்லாத காலத்திலே, அதன் காரணமாக மக்கள் விரைவில் முன்னேற்ற மடையாமல் தேங்கியிருந்த காலத்திலே, வசன நூல்களின் நன்மை யையும் சிறப்பையும் இன்றியமையாமையையும் மக்கள் நன்குணர்ந்தி ருந்தார்கள், வசன நூல்கள் இல்லாத குறை பாட்டினால், அக்காலத்தவர் விரைவில் முன்னேற்றமடைய முடியாமல் இருந்த நிலையை அவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள். நம் நாட்டினரும் ஐரோப்பியரும் இந்தக் குறைபாட்டினை யுணர்ந்து அக்காலத்திலேயே கூறியுள்ளார்கள்.