உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

-

107

சிறப்பை அறியாதவன், அவற்றை யெல்லாம் யாருக்கோ சொற்ப விலைக்கு விற்றுவிட்டான் என்பதைப் பிறகு அறிந்தேன்.

சென்ற 19-ஆம் நூற்றாண்டில், எந்தெந்த நூல்கள் எந்தெந்த ஆ ண்டில் அச்சிடப்பட்டன என்பதை இப்போது அறிய முடிய வில்லை. சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நூல்கள் இப்போது பெரும்பாலும் மறைந்துவிட்டன. யாரிடத்தில் எந்தெந்த நூல்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தொகுக்க இயலவில்லை. இஃது ஒர் ஆராய்ச்சியாய் விட்டது. இவ்வாராய்ச்சி பொறுமையோடும் ஊக்கத்தோடும் செய்ய வேண்டிய கடினமான ஆராய்ச்சியாகும்.

1. பாணம்

அடிக்குறிப்புகள்

இராமபாணம் என்னும் பூச்சி