உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

201

என்று கருதலாம். இந்தச் செய்யுளில் அச்சுதன் என்னும் அரசன் கூறப் படுகிறான். இந்த அச்சுதன், அச்சுத விக்கந்தன் என்று கூறப்படுகிற களபர அரசனாக இருக்கலாம். அப்படியானால், விளக்கத்தனாரும் கி.பி. 450-இல் வாழ்ந்தவராதல் வேண்டும்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சோழநாட்டில் வாழ்ந்திருந்த ஆசாரிய புத்ததத்த மகாதேரர் என்னும் பௌத்த சமய ஆசாரியர், பாலிமொழி யில் சில நூல்களை எழுதியிருக்கிறார். அந் நூல்களில் வினயவினிச் சயம் என்பதும் ஒன்று. சோழநாட்டுப் பூதமங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் என்பவர் அமைத்த பௌத்த விகாரையில் தங்கியிருந்து, அச்சுத விக்கந்தன் என்னும் அரசன் சோழ நாட்டை யரசாண்ட காலத்தில்) வினயவினிச்சய நூலை ஆசாரிய புத்ததத்தர் எழுதியதாகக் கூறுகிறார். எனவே, விளக்கத்தனார், அச்சுதன் அல்லது அச்சுதவிக்கந்தன் இருந்த கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் ஆவர்.

விளக்கத்தனார் இயற்றிய 'கெடலருமாமுனிவர்' எனத் தொடங்கும் செய்யுள் இது:

தரவு

கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ யழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத் தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புனலி னிழிகுருதி யகலிட முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்.

தாழிசை

முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல ரடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ. கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச் சேணுய ரிருவிசும்பிற் செகுத்தலுநின் சினமாமோ.