உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

உவின்ஸ்லோ

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

19-ஆம் நூற்றாண்டிலே இருந்த தமிழ்ப் புலவர்கள் நினைத்த வுடனே கவிபாடும் பழக்கம் உள்ளவர்கள். அத்தகைய அவர்கள் வசனம் எழுதும் பழக்கம் இல்லாமல் அல்லற்பட்டார்கள். உலின்ஸ்லோ என்னும் ஐரோப்பியர் தாம் எழுதிய - தமிழ் -ஆங்கில அகராதியை 1862-இல் அச்சிட்டபோது அதன் முகவுரையில் தமிழ் வசன நடையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: 'தமிழனுடைய வசன நடை இன்னும் உருவடையா நிலையில்தான் இருக்கிறது. அதனைச் சரியாக உருப்படுத்துவதற்கு அறிஞர்கள் செய்யும் முயற்சி நல்ல பலன் தரும். சுதேசிகள் பலர் பாக்களை விரைவாகப் பாடக்கூடிய வர்களாக இருந்தும், பிழையின்றி வசனம் எழுதத் தெரியாமல் இருக்கிறார்கள்' என்று அவர் எழுதியுள்ளார்.

மர்டாக்கு

6

·

"தமிழ் அச்சுப் புத்தகங்களின் பட்டியல்" என்னும் நூலை ங்கிலத்தில் 1865-ஆம் ஆண்டில் எழுதிய மர்டாக் என்னும் மேல்நாட்டறிஞரும் அந்நூலின் முகவுரையில் இதே கருத்தை எழுதியுள்ளார். 'பாட்டுகளுக்கு எழுதப்பட்ட உரைகள் தவிர, மருத்துவம் கணக்கு, இலக்கணம், அகராதிகள் உட்பட எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பாட்டாகவே எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பியரின் தொடர்பினால், தமிழ் வசன இலக்கியம் வளர்ச்சி பெற்றது என்று கூறலாம்' என்று அவர் எழுதுகிறார்.2

விசாகப் பெருமாள்

19-ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்து சிறந்த தமிழ்ப் புலவராய் விளங்கிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர் என்னும் வீரசைவர் 1852-ஆம் ஆண்டில் தாம் எழுதிய பாலபோத இலக்கணம் என்னும் நூலின் பாயிரத்திலே உரைநடை நூல்களின் முதன்மையைப் பற்றிக் கீழ்வருமாறு எழுதியுள்ளார்:-

66

'இலக்கண இலக்கிய கணித பூகோள ககோளாதி நூல்களை யெல்லாம் இக்காலத்து இத்தேசத்தை யாளுகின்ற இங்கிலீஷ்காரர் களும், அவர்கள் வசிக்கும் கண்டத்திலுள்ள ஏனையோர்களும் செய்யுளில் இயற்றிக் கற்பிப்பதை விட்டு, வசனங்களிலே தெளிவுற இயற்றிச் சிறுவர்க்குக் கற்பித்துக்கொண்டு வருகின்றனர். அதனால்