உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

111

அக்கண்டத்தில் வாழும் சிறுவர்கள் சில நாட்களிலே பல நூல்களைக் கற்றுப் பல விஷயங்களையும் உணர்ந்து பல தொழில்களையும் இயற்றும் திறமுடையராகின்றனர்.

66

இத்தேசத்தார் அந்நூல்களை யெல்லாம் செய்யுளிலே செய்து அவற்றிற்குத் திரி சொற்களால் உரையியற்றிச் சிறுவர்க்குக் கற்பித்து வருகின்றனர். இவ்வாறு செய்யுளில் இயற்றப்பட்ட நூல்கள், நிகண்டு முதலிய கருவி நூல்களைக் கற்றன்றிக் கற்கப்படாவாம். ஆகவே, அவற்றுள் ஒரு நூலைக் கற்பதற்கு நெடுநாள் செல்லுகின்றது. செல்லவே, பல நூல்களைக் கற்றுணர்ந்து எத்தொழில்களையுஞ் செய்யத்தக்கவர்களாவது அரிதாம்.

66

'இதனால் இந்நாட்டுச் சிறுவர்கள் தங்கள் வாழ்நாட்கள் வீழ்நாட்படாமற் சில நாட்களில் அப் பல நூல்களையும் கற்றறிந்து எத்தொழில்களையும் செய்யத் தக்கவல்லமை அடைவதற்கு. அந் நூல்களையெல்லாம் உலகவழக்கியற் சொற்களால் உரை வசனமாகத் தெளிவுறச்செய்து கல்விச் சாலைகளிலே உபயோகமுறும்படி செய்தல்

நன்று.

வேதநாயகர்

மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள் 1885-இல் தாம் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நவீனத்தில், 42-ஆம் அதிகாரத்தில். சுதேசபாஷாபிவிருத்தி என்னும் பகுதியில் வசன இலக்கியங்களைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.

66

ங்கிலீஷ், பிரான்சு முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசன காவியங்கள் இல்லாமலிருப்பது பெருங்குறை வென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். அந்தக் குறைவைப் பரிகரிப்பதற்காகத்தான் எல்லாரும் இராஜ பாஷைகளுந் தமிழுங் கலந்து படிக்கவேண்டு மென்று விரும்புகிறோம். இராஜபாஷைகளும் சுதேசபாஜைகளும் நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும் உத்தமமான வசன காவியங்கள் எழுதக் கூடுமேயல்லாது இதரர்கள் எழுதக் கூடுமோ? வசன காவியங் களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது செய்யுட்களைப் படித்துத்திருந்துவது அசாத்தியம் அல்லவா? ஐரோப்பிய பாஷை களில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரீகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே