உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

நம்முடைய சுயபாஷைகளில் வசனகாவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்.”

இந்தப் பிரதாப முதலியார் சரித்திரத்தின் ஆங்கில முகவுரையில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள் இதே கருத்தை மிகத் தெளிவாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.3

சபாபதி நாவலர்

சபாபதி நாவலர் அவர்கள் 1899-இல் தாம் எழுதிய திராவிடப் பிரகாசிகை என்னும் நூலின் மரபியல் என்னும் பகுதியில் தமிழில் வசன நூல்கள் இல்லாதிருந்ததைக் குறிப்பிடுகிறார். "தமிழ் மொழியார் சூத்திரஞ் செய்யுளென்றும் மிரண்டாற்றானே நூலியற்றுப: உரையானி யன்ற தொல்லாசிரியர் தமிழ் நூல் அரிதென்றுணர்க” என்று அவர் எழுதியுள்ளார்.

.4

சாமுயல் ஐயர் அவர்கள் தாம் எழுதிய உள்ளது நாற்பது என்னும் நூலிலே “சொந்தப் பாஷை” என்னும் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:-

66

"இந்தக் காலத்தில் தமிழ்ப் பாஷையைச் சுத்தமாய் வாசிக்கவும் பிழையற எழுதவும் அறிந்த தமிழர் வெகுசிலர். சிலர் எழுதும் பத்து வரிக் கடிதத்தில் இருபது பிழைகள் காணலாம்.

கம்பெனி முயற்சி

19-ஆம் நூற்றாண்டில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியார் என்னும் வர்த்தகச் சங்கத்தார் இந்திய தேசத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். அவர்கள் இந்திய தேசத்தைச் சில மாகாணங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். அந்தப் பிரிவுகளில் சென்னை மாகாணமும் ஒன்று. சென்னை மாகாணத்தில் தமிழ் நாடும் சேர்ந்திருந்தது. நாட்டை ஆட்சி செய்வதற்கு இங்கிலாந்திலிருந்து ஆங்கிலேய உயர்தர உத்தியோகஸ்தர்கள் வந்தனர். இந்த உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எந்தப் பகுதியில் அலுவல் புரிகிறாரோ அந்தப் பகுதியின் பாஷையை அறிந்திருக்கவேண்டும் என்னும் சட்டம் அக் காலத்தில் இருந்தது. அந்தந்தப் பகுதியில் வழங்கும் தேச பாஷையை அறிந்திருந்தால்தான் அவர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.