உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

சுரிதகம்

அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் ஒன்று கட லுலக முழுவதும்

ஒன்றுபு திகிரி யுருட்டுவோ னெனவே.

203

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற, வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' என்னும் தொல் (பொருள் புறத்திணையியல்) சூத்திர உரையில் இளம்பூராண அடிகள், கொடிநிலை முதலிய மூன்றும், 'பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்' என்று கூறி உதாரணமாகக் ‘கெடலரு மாமுனிவர்' எனத் தொடங்கும் இந்தக் கலிப் பாட்டின் சுரிதகப் பகுதியை மேற்கோள் காட்டி, 'என்பதனுட் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்திய வரலாறு காண்க' என்று எழுதுகிறார்.

1.

2.

Nơi

3.

4.

அடிக் குறிப்புகள்

ஸ்ரீஇராஜராஜ விஜயம் என்னும் பெயருள்ள நூல் ஒன்றை சவர்ணன் நாரண பட்டாதித்தன் என்பவன் இயற்றினான் என்று திருப்பூந்துருத்திச் சாசனம் ஒன்று கூறுகிறது. (Annual Report on S.I. Epigraphy, 1930 - 31). ஆனால், இது வடமொழி நூலா, தமிழ்மொழி நூலா என்பது தெரியவில்லை இந்நூலும் கிடைக்கவில்லை.

S.I. Vol. II, Page 306 - 307; 120 of 1931; A.R.E. 1932 11 & 12

Ep. Coll. 444 of 1929-30.

No. 7563 page 382. South Indian Inscriptions, Vol. VII.