உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

219

எனப் பதின்மூன்றால் ஆய்ந்தார் அவிநயனார். இவற்றுள் தொல்காப்பியனார் ஆராய்ந்தன நீக்கி மயக்கமும், சொல்லும், செப்பும், வினாவும், எச்சமும், மரபும் ஏற்றமாகச் சொன்னார்.”

வீரசோழிய உரையாசிரியர் தமது உரையிலே அவிநய நூலிலிருந்து இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அச் சூத்திரங்கள் இவை:

“தொல்காப்பியனார், ஒடு என்னும் பிரத்தியமொன்றே மூன்றும் வேற்றுமைக்கு உருபாகச் சொன்னார்.

'ஆலும் ஆனும் மூன்றே னுருபே’

என்றார் அவிநயனார்."

66

(சொல்லதிகாரம், வேற்றுமைப் படலம், 6 ஆம் காரிகை உரை)

ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு

மிக்க வரினு மப்பாற் படுமே'

என்றார் அவிநயனார்.

(யாப்பதிகாரம், 19ஆம் காரிகை உரை)

யாப்பருங்கலக் காரிகை யுரையாசிரியராகிய குணசாகரர் தமது உரையிலே, அவிநய நூலிலிருந்து கீழ்க்காணும் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்:

“தத்தம் பாவினத் தொப்பினுங் குறையினும்

ஒன்றொன் றொவ்வா வேற்றுமை வகையாற்

பாத்தம் வண்ண மேலா வாகிற்

பண்போல் விகற்பம் பாவினத் தாகும்.

குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையான்

முதற்பாத் தனிச்சொலி னடிமூ விருவகை

விகற்பினு நடப்பது நேரிசை வெண்பா

என்றார் அவிநயனார்.'

و,

(யாப்பருங்கலக்காரிகை, 23ஆம் காரிகை உரை மேற்கோள்)

“கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்

தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ