உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

“கால மறிதொழில் கருத்தினோ டியையப்

பால்வகை தோறும் படுமொழி வேறே.

6

(நன்., வினை, 1, மயிலைநாதர் உரை மேற்கோள்)

“கால்வாய், அடைகட லென்பன வாயையுடைய கால், கடலினது அடையென முன்மொழிப் பொருள் குறித்தன. வேங்கைப்பூ, கருங்கு திரை என்பன பின்மொழிப் பொருள் கருதின. இவை ஈரிடத்திற்கும் அவிநயத்திற் காட்டினவை.”

(நன்., பொதுவியல், 19 உரை)

பன்னிருபாட்டியலில் அவிநய நூலிலிருந்து சில சூத்திரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

"உணவே யமுதம் விடமு மாகும்.

அந்தச் சாதிக் கந்தப் பாவே

தந்தனர் புலவர் தவிர்ந்தனர் வரையார்.

வெள்ளையு மகவலும் விருத்தமுங் கலியும் வஞ்சியு மெஞ்சா மங்கலம் பொருந்தும். வெள்ளை யகவல் விருத்தங் கலியே வஞ்சி யென்றிவை மங்கலப் பாவே.

காட்டிய முறையே நாட்டிய வாண்பாற் கெல்லையும் பெயரு மியல்புற வாய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரு முளரே. பாலன் யாண்டே யேழென மொழிப. மீளி யாண்டே பத்தியை காறும். மறவோன் யாண்டே பதினான் காகும். திறலோன் யாண்டே பதினைந் தாகும். பதினா றெல்லை காளைக் கியாண்டே. அத்திற மிறந்த முப்பதின் காறும் விடலைக் காகு மிகினே முதுமகன்.

நீடிய நாற்பத் தெட்டி னளவு

மாடவர்க் குலாப்புற முரித்தென மொழிப.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12