உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

கலால்=காய்ச்சிய மதுபானம்.

கலீமா=விசுவாசப் பிரமாணம். (லா இராஹில்லுல்லா முகம்மது ரசூலுல்லா என்னும் வாக்கியம்).

கலீபா=முகம்மது நபிக்குப் பின்னால் வந்த முஸ்லிம் மதத் தலைவர்கள்.

கஜானா=பொக்கிஷ சாலை.

கஜான்ஜி=நிதிக் காவலர்.

காயம்=நிலையான, உறுதியான.

காயம் ஜமாபந்தி=நிலையான ஏற்பாடு.

காய்தா=சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு, வரையறை,

காஜி=நியாயாதிபதி,-நீதிபதி.

கிஸ்து=வரி, தவணை, குறிப்பிட்டபடி பணம் செலுத்தல். கிதாபு=புத்தகம், நூல்.

=

கிலாபத் = கலீபாவின் உத்தியோகம்.

குர் ஆன் (குறு ஆன்)= குறான், இஸ்லாமிய வேதப் புத்தகம். குர் ஆன் ஷரீப்=மேன்மையான குறான்.

குலாம்=வேலைக்காரன், அடிமை.

குர்பான் (குர்பானி)=பலி.

கைதி=சிறை செய், காவலில் அடைத்தல்.

கைபியது=செய்தி, விவரம்.

சராப்பு=ஷராப், காசுக்கடை.

சலாம்=சமாதானம்.

சவால்=கேள்வி.

சன்னது=ஆதாரப் பத்திரம், உரிமைப்பத்திரம்.

சாமான்=பொருள், பிரயாண மூட்டைகள்.

சுபா=மாகாணம், மாவட்டம்.

டபேதார்=தலைமை ஊழியன், தலைமை வேலையாள்.

தகரார்=மறுத்தல், விவாதம், சச்சரவு.

தபா=சமயம், காலம், நேரம்.