உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

தயார்=ஆயத்தமாயுள்ள.

தாக்கீது=உத்தரவு, கட்டளை.

தர்ஜுமா=மொழி பெயர்ப்பு.

தாலூகா=தாலுகா (நாட்டின் ஒரு பிரிவு).

தீன்=சன்மார்க்கம்.

துஆ=ஜெபம், வேண்டிக்கொள்ளுதல்.

தோபா=பெரிய அரசனுக்குச் சிறிய அரசன் செலுத்தும் கப்பம். நகல்=மாதிரி, பிரதி.

நபர்=ஆள், மனிதன்.

நபி=தீர்க்கதரிசி.

நமூனா=மாதிரி.

நிகரஹ்=திருமணம், கலியாணம்.

பதல், பதில்=ஒன்றுக்காக மற்றொன்று.

பக்கிரி=முஸ்லிம் துறவி.

பராரி=ஒளிந்துகொள், தலைமறைவாயிரு, ஓடிப்போதல்.

பாக்கி=மிச்சம், எஞ்சியுள்ளது, மீதமுள்ளது.

பாபத்து=ஒப்பந்தத்தின் ஒரு பகுதி, புள்ளி விபரங்களில் ஒன்று.

பிர்கா=நாட்டின் சிறு பிரிவு.

பிஸ்மில்லாஹி=கடவுளுடைய பெயரிலே.

பைசல்=ஒழுங்குசெய், தீர்ப்புசெய், முடிவுசெய், ஏற்பாடு செய்.

மசோதா=தீர்மானம்.

மதராஸா=பாடசாலை.

மராமத்து, மரமத்து=பழுது தீர்த்தல், செப்பனிடுதல்.

மஹல், மஹால்=அரண்மனை.

மாசூல்=பயிர் விளைச்சல்.

மாமூல்=வழக்கம், வாடிக்கையில் உள்ள.

மாரிபத்து=பாதுகாப்பில், பொறுப்பில்

மாஜி=காலஞ்சென்ற, முன் பதவியில் இருந்த.

முகாம்=பிரயாணத்தின் இடையிலே தங்குதல்.

143