உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

முஸாபிர்=பிரயாணி.

முஸாபர்கானா=பிரயாணிகள் தங்கும் கட்டடம், சத்திரம். முன்சீபு=கிராமம் அல்லது மகாணத்தின் நீதிபதி.

மோசூல்=ஒரு ஆளைப்பார்த்துக் கொள்ளும்படி ஏற்படுத்தப்பட்ட

சிப்பாய்.

மைதானம்=திடல்.

மௌலானா=பண்டிதர்.

மௌல்வி=பண்டடிதர்.

யாதாஸ்து=ஞாபகக் குறிப்பு.

ரத்து=விலக்கு, தள்ளு.

ரஸூல்=அப்போஸ்தலன் (முகம்மது நபி).

ராஜி=உடன்பாடு, இணங்கு, ஒப்பந்தம்.

ராஜிநாமா=உடன்படிக்கை. வேலை துறப்பதுப்பற்றி எழுதிக் கொடுக்கும் கடிதத்துக்கும் இச் சொல் வழங்கப்படுகிறது. ருஜு=ஆதாரம் காட்டு.

லாயிக், லாயக்கு=தகுதி, யோக்கியதை.

வகாலத்து=ஒரு காரியத்தைச் செய்வதற்குக் காரணமாயுள்ள கருவி. வகைரா=மற்ற, முதலானவர்கள்.

வக்கீல் (வைக்கீல்)=காரியத்தை இயற்றுகிறவன்.

வசூலத்து=திரட்டு (பணம் வாங்கிச் சேர்த்தல்).

வஜா=குறைவு செய், கழிவுசெய்.

வாயிதா=காலங் குறிப்பிடுதல், குறிப்பிடப்பட்ட காலம்.

வார்ஸ்=உரியவர், சொத்து உரிமையுடையவர்.

றஹிமான், றஹீம்=இரக்கமுள்ளவன் (கடவுள்)

ஜநாப்=மென்மையுள்ள.

ஜப்தி=பறித்தல், பற்றிக்கொள்ளல்.

ஜமா=வசூல்.

ஜமாபந்தி=வரியைப்பற்றி ஏற்பாடு செய்தல்.

ஜவாபு=பதில், விடைசொல்.