உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

ஜாமீன்=பிணை, பிணைஇரு.

ஜாஸ்தி=அதிகம்.

ஜில்லா=மாவட்டம், கூற்றம், கோட்டம்.

ஜினுசு, ஜின்சு=வகை, பொருள்.

ஷரா=ஒன்றைப்பற்றிய கருத்து, காரணம், குறிப்பு.

ஷர்பத்து (சர்பத்து)=இனிப்புப் பானகம்.

ஹபீபுல்லா=கடவுளுடைய நண்பன்.

ஹராம்=அக்கிரமம், துன்மார்க்கம்.

ஹிஜ்ரத்=முகம்மது நபி மெக்காவிலிருந்து மதீனாவுக்குப் போனது.

அலைஹிஸ்ஸலாம்=அவரோடு சமாதானம்.

II. பாரசீக மொழிச் சொற்கள்

அம்பார், அம்பாரம்=தானியம் முதலிய பொருள்களின் குவியல். ஆகர்=கடைசி, முடிவு.

ஆப்காரி=காய்ச்சிய மதுபானங்களுக்கு வரி.

கம்மி=குறைவு.

கரம்=சூடு, காரம்.

கார்பாரி=மேற்பார்வையாளர், கண்காணிப்பவர்.

கில்லேதார்=கோட்டையின் தளகர்த்தன்.

கிஸ்தி=இறை, வரி.

குமாஸ்தா=கணக்குப்பிள்ளை, தொழிலில் பிரதிநிதி.

குலாம்=அடிமை.

சரகத்து=எல்லை, வரம்பு.

சர்க்கார்=அரசாங்கத்தார்.

சிப்பந்தி=ஊழியர்களை ஸ்தாபித்தல்

சிரஸ்தா, சிரஸ்தாதார், சிரஸ்தார்=கலக்டர் கச்சேரி, அல்லது நீதிமன்றத்தில் உள்ள ஒரு உத்தியோகஸ்தர்.

சுமார்=மதிப்பீடு, கணக்கிடு.

சுஸ்தி=சோம்பல், மந்தம்.

145