உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

"நேர்பசை நிரைபசை வேண்டாது நேரசை நிரையசை வேண்டி நாலசைப் பொதுச் சீர் வேண்டினார் காக்கைபாடினியார் முதலிய ஒருசாராசிரியர்.’

99

(யாப்பருங்கலம், சீரோத்து, 1 உரை)

“எல்லாம் என்பது சொல்லவேண்டிய தென்னையெனின், பெரு நூன் மருவா வொருசாராரும் சான்றோர் செய்யுட்டன்மை யறியாதோரும், நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் பிற தளையும் வெண்பாவினு ளருகி வரு மென்பா ருளராயினும், அவ்வாறு வரின் வெண்பா வழியும் செப்ப லோசை தழுவி நில்லாதகலினென்று மறுத்தார் காக்கைபாடினியார் முதலாகிய மாப்பெரும் புலவர்; அவரது துணிபே இந்நூலுள்ளும் (யாப் பருங்கலம்) துணிபு என்று யாப்புறுத்தற்கு வேண்டப்பட்டதெனக் கொள்க. (யாப்பருங்கலம், தளையோத்து, 22 உரை)

"காக்கைபாடினியார் முதலாகிய வொருசாராசிரியர் மாப்பெரும் புலவர்தம் மதம்பற்றி நாலசைச்சீர் விரித்தோதினார் இந்நூலுடையார் (யாப்பருங்கல நூலுடையார்) எனக் கொள்க.’

وو

(யாப்பருங்கலம், ஒழியியல், விருத்தியுரை)

யாப்பருங்கலத்தின் புறனடை நூலாகிய யாப்பருங்கலக் காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர் தமது உரையில் கீழ்க்காணும் காக்கைபாடினியார் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்:

66

‘குறினெடி லளபெடை யுயிருறுப் புயிர்செய்

வலிய மெலிய விடைமையோ டாய்தம்

இஉ ஐயென் மூன்றன் குறுக்கமோ டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும்.

நாலசை யானு நடைபெறும் ஓரசை சீர்நிலை யெய்தலுஞ் சிலவிடத் துளவே.

கூறிய வஞ்சிக் குரியன வாகலும் ஆகுந வென்ப வறிந்திசி னோரே.

குன்று கூதிர் பண்பு தோழி

விளியிசை முத்துற ழென்றிவை யெல்லாந்

தெளிய வந்த செந்துறைச் செந்துறை.

1

2

3

6

4