உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

தராசு=துலை.

தர்காஸ்து=குத்தகை.

தயார்=ஆயத்தம்.

தஸ்தா=ஒரு கொயர் எண்ணிக்கையுள்ள கடதாசி. தஸ்தாவேசு, தஸ்தாவேஜு=பத்திரம், உறுதிச்சீட்டு.

தீவான்ஜி=அமைச்சர்.

நமூது=நிருபனம், ருசு.

நாதார்=ஏழை, ஏழைக் குடியானவன்.

பந்து=கட்டு, அடை

பந்தேகானா=அடைத்து வைக்கும் இடம், ஜெயில்.

பந்தோபஸ்து=பாதுகாப்பு, ஏற்பாடு செய்.

படுதா, பர்தா=திரைச் சீலை, மறைப்பு.

பாரா=காவல்.

பிரியாதி=வாதி, வழக்குத் தொடர்வோன். பேஷ்=நல்லது, சரி, மிகவும் நல்ல.

பேஷ் கார்=தாசில்தாருக்குக் கீழ்ப்பட்ட ஒரு உத்தியோகஸ்தன்.

மனு=வேண்டுகோள்.

ரஸ்தா=சாலை, தெருவு.

வாபஸ்=திருப்பிக்கொடு.

ஜமீன்=நிலம், பூமி.

ஜரூர்=அவசரமாக, விரைவாக, இன்றியமையாத.

ஜவாபு=பதில், விடை.

ஜாகீர்=அரசாங்கத்தார் கொடுத்த நிலம், ஊழியம், தொண்டு, உதவி செய்ததற்காகப் பெற்ற நிலம்.

ஜோர்=விசையாக, ஆவேசமாக.

III. ஹிந்துஸ்தானிச் சொற்கள்

இலாக்கா=உடைமையாகக் கொள், தொடர்புடைய, பொறுப்புடைய. சாப்பா=முத்திரை, பதிப்பு.