உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வரைத்தித் துணையென வைத்துரை யில்லென்

றுரைத்தனர் மாதோ வுணர்ந்திசி னோரே.

16

அசையினுஞ் சீரினு மிசையினு மெல்லாம் இசையா தாவது செந்தொடை தானே.

17

தொடையொன் றடியிரண் டாகி வருமேற் குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே.

18

இரண்டா மடியி னீறொரூஉ வெய்தி முரண்ட வெதுகைய தாகியு மாகா

திரண்டு துணியா யிடைநனி போழ்ந்தும் நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா.

தொடையடி யித்துணை யென்னும் வழக்க முடையதை யன்றி யுறுப்பழி வில்லா நடையது பஃறொடை நாமங் கொளலே. ஒருமூன் றொருநான் கடியடி தோறுந் தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளை விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே.

அளவடி யந்தமு மாதியு மாகிக் குறளடி சிந்தடி யென்றா விரண்டும் இடைவர நிற்ப திணைக்குற ளாகும்.

19

20

21

22

ஒத்த வடித்தா யுலையா மரபொடு நிற்பது தானே நிலைமண் டிலமே. என்னென் கிளவி யீறாப் பெறுதலும்

23

அன்னவை பிறவு மந்த நிலைபெற

நிற்கவும் பெறூஉ நிலைமண் டிலமே.

24

உரைப்போர் குறிப்பி னுணர்வகை யின்றி

இடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டில யாப்பே.

25

தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகம்

எனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி.

26