உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

நீர்த்திரை போல நிரலே முறைமுறை யாக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம்

தாக்கித் தழுவுந் தரவினோ டேனவும்

யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம்.

57

வெண்டனை தன்றளை யென்றிரு தன்மையின்

வெண்பா வியலது வெண்கலி யாகும்.

58

எருத்திய லின்றி யிடைநிலை பெற்றும்

இடைநிலை யின்றி யெருத்துடைத் தாயும்

எருத்த மிரட்டித் திடைநிலை பெற்றும் இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும் இடையு மெருத்து மிரட்டுற வந்தும் எருத்த மிரட்டித் திமைநிலை யாறாய் அடக்கியல் காறு மமைந்த வுறுப்புக் கிடக்கை முறைமையிற் கிழமைய தாயுந் தரவொடு தாழிசை யம்போ தரங்கம் முடுகியல் போக்கிய லென்றிவை யெல்லாம் முறைதடு மாற மொழிந்தவை யன்றி யிடைநிலை வெண்பாச் சிலபல சேர்ந்து மற்றும் பிறபிற வொப்புறுப் பில்லன

கொச்சக மென்னுங் குறியின வாகும்.

59

அந்தடி மிக்குப் பலசில வாயடி

தந்தமி லொன்றிய தாழிசை யாகும்.

60

ஐஞ்சீர் முடிவி னடித்தொகை நான்மையொடு

எஞ்சா மொழிந்தன வெல்லாங் கலித்துறை.

61

நாலொரு சீரா னடந்த வடித்தொகை

யீரிரண் டாகி யியன்றவை யாவுங்

காரிகை சான்ற கலிவிருத் தம்மே.

62

தன்றளை பாதந் தனிச்சொற் சுரிதக மென்றிவை நான்கு மடுக்கிய தூங்கிசை வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே.

63