உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

யந்தமின் முரணே செந்தொடை யியைபே

பொழிப்பே ஒரூஉவ யிரட்டை யென்னும்

மியற்படு தொடைக ளிவைமுத லாகப்

பதின்மூ வாயிரத் தறுநூ றன்றியும்

தொண்ணூற் றொன்பதென் றெண்ணினர் புலவர்.

வல்லொற்றுத் தொடர்ச்சியு மெல்லொற்றுத் தொடர்ச்சியு மிடையொற்றுத் தொடர்ச்சியு முறைபிறழ்ந் தியலும்.

செப்பல் ஓசை வெண்பா வாகும்.

ஏந்திசைச் செப்பலுந் தூங்கிசைச் செப்பலு மொழுகிசைச் செப்பலு முண்ணும் வெண்பா செப்ப லோசை வெண்பா வாகும்.

வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை யேந்திசைச் செப்ப லென்மனார் புலவர்.

இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத் தூங்கிசைச் செப்ப லென்மனார் புலவர்.

17

18

19

20

21

22

வெண்சீ ரொன்றலு மியற்சீர் விகற்பமும்

ஒன்றிய பாட்டே யொழுகிசைச் செப்பல்.

23

கொச்சகம் வெண்கலி யொத்தா ழிசையென முத்திற மாகுங் கலியின் பகுதி.

24

16. சிறுகாக்கைபாடினியம்

சிறுகாக்கைபாடினியம் என்பவர் இயற்றிய இந்நூலுக்குச் சிறு காக்கைபாடினியம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. இது செய்யுளி லக்கண நூல் என்பது தெரிகிறது. இவருக்கு முன்னர் காக்கை பாடினியார் என்பவர் ஒருவர் தமது பெயரால் காக்கை பாடினியம் என்னும் இலக்கண நூலைச் செய்திருத்தல் பற்றி. அவரின் இவர் வேறானவர் என்பது குறிப்பதற்காகச் சிறு என்னும் அடைமொழி கொடுத்துச் சிறுகாக்கைபாடினியார் என்று வழங்கப் பட்டார்.

தொல்காப்பியப் பொருளதிகாரம், செய்யுளியல், 1ஆம் சூத்திர உரையில், பேராசிரியர் இவரைப் பற்றி எழுதுவதாவது: