உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

ஆத்மபோதம் என்னும் நூலை மொழிபெயர்த்து 1840-இல் அச்சிட்டார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலை 1848-இல் எழுதினார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். திருக்குறள் 63 அதிகாரங்களைப் பரிமேலழகர் உரையுடனும், தமது தெளிபொருள் விளக்கத்துடனும். துரு ஐயர் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்புடனும் அச்சிட்டார். உலின்ஸ்லோ ஆங்கிலத்தமிழ் அகராதி எழுத இவர் உதவி செய்திருக்கிறார்.

முத்துராமலிங்க சேதுபதி (?-1873)

இவர் இராமநாதபுரம் அரசர். பாஸ்கர சேதுபதியின் தந்தையார். முருகர் அநுபூதி, பிரபாகரமாலை, வள்ளி மணமாலை, சரசசல்லாப மாலை, சடாக்கர சாரப்பதிகம், நீதிபோதம், பாலபோதம் முதலிய நூல்களை இயற்றினார்.

குமாரசுவாமி முதலியார் (1791-1874)

யாழ்ப்பாணத்து உடுப்பிட்டியைச் சேர்ந்த வல்லுவட்டி இவர் ஊர். தாய் மாமனாகிய முத்துக்குமார முதலியாரிடம் கல்வி பயின்றார். பல தனிக் கவிகளைப் பாடினார். இவை, இன்கவித்திரட்டு என்னும் பெயருடன் ஆறுமுகம் பிள்ளையால் அச்சிடப்பட்டன. அருளம்பலக் கோவை, இந்திரகுமார நாடகம், திருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய்ச் சித்திவினாயகர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை, கந்தவன நாதர் ஊஞ்சல் என்னும் நூல்களையும் இயற்றினார்.

ஊர்காவற்றுறையில் நீதிபதியாக இருந்தவரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அச்சிட்ட தமிழகராதிக்கு ஆசிரியராக இருந்த வருமான கதிரைவேற் பிள்ளை அவர்கள் இவருடைய இரண்டாம் மைந்தர் ஆவர்.

கிருஷ்ண பாரதி (1791–1869)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருநயம் என்னும் ஊரில் பிறந்தவர். சேலம் முதலிய ஊர்களில் வசித்தவர். இறுதியில் துறவு பூண்டார். இசைப்பயிற்சியுள்ளவர். இசைப் பாடல்களும் செய்யுள் நூல்களும் இயற்றினார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திரிசிரபுரம் தியாகராய செட்டியார். அநந்த பாரதி ஐயங்கார் முதலியவர்களின் நண்பர். இவர் இயற்றிய நூல்கள்: திருவிளையாடற்