உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

25. பரிப்பெருமாள் இலக்கண நூல்

267

திருக்குறளுக்கு உரைய எழுதிய பதின்மருள் பரிப்பெருமாள் என்பவரும் ஒருவர். இவர் ஓர் இலக்கண நூலையும் இயற்றினார் என்று அறிகிறோம். என்னை?

தெள்ளி மொழியியலைத் தேர்ந்துரை த்துத் தேமொழியார் ஒள்ளிய காமநூ லோர்ந்துரைத்து-வள்ளுவனார்

பொய்யற்ற முப்பால் பொருளுரைத்தான் தென்செழுவைத்

தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து

என்று அவர் எழுதிய திருக்குறள் உரைப்பாயிரச் செய்யுள் கூறுவது

காண்க.

இவர் எழுதிய 'காமநூலின்' பெயரும் மற்றச் செய்திகளும் தெரியவில்லை.

26. பரிமாணனார் யாப்பிலக்கணம்

பரிமாணனார் என்பவர் இயற்றிய ஒரு யாப்பிலக்கண நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் மயிலை நாதரும் தமது உரைகளில் குறிப்பிடுகிறார்கள். பரிமாணனார் நூலிலிருந்து சில சூத்திரங்களையும் மேற்கோள் காட்டுகிறார்கள்.

இந்தப் பரிமாணனார் என்பவர் யார், எந்தக் காலத்தில் இருந்தவர். இவர் செய்த யாப்பிலக்கண நூலின் பெயர் என்ன என்பவை ஒன்றும் தெரியவில்லை. இந்நூல் இப்போது கிடைக்க வில்லை.

இந்நூலிலிருந்து, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்க் காணும் சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்:

"வஞ்சீ யாசிரிய மென்றிரு பாட்டு

மெஞ்சா மூவடி யிழிபுயர் பாயிரம்.

அவற்றுள்,

ஆசிரிய மென்ப தகலின் வழாது

கூறிய சீரொடுந் தளையொடுந் தழீஇ

முச்சீ ரடியா யீற்றயல் நின்று

மச்சீ ரடியிடை யொரோவழித் தோன்றியு

மவ்வியல் பின்றி மண்டில மாகியும்

1