உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

271

யாப்பருங்கலக்காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர், தமது உரையில் பல்காயனார் சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். அவை வருமாறு:

66

முதழுெத் தொன்றின் மோனை யெதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா

அதுவொழித் தொன்றி னாகு மென்ப.

இயற்சீர் நேரிற றன்றளை யுடைய கலிக்கியல் பிலவே காணுங் காலை வஞ்சி யுள்ளும் வாரா வாயினும் ஒரோவிடத் தாகு மென்மனார் புலவர்.

1

2

வஞ்சி விரவ லாசிரிய முரித்தே

வெண்பா விரவினுங் கடிவரை யிலவே.

3

அடிமுதற் பொருளைத் தானினிது கொண்டு

முடிய நிற்பது கூனென மொழிப.

4

வஞ்சி யிறுதியு மாகு மதுவே

அசைகூ னாகு மென்மனார் புலவர்.

5

யாப்பருங்கல விருத்தியுரைகாரர், தமது உரையில் கீழ்க்காணும் சூத்திரங்களைப் பல்காயனார் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.

இமிழ்கடல் வரைப்பி னெல்லையில் வழாஅத் தமிழியல் வரைப்பிற் றாமினிது விளங்கி

யாப்பிய றானே யாப்புற விரிப்பின்

எழுத்தசை சீர்தளை யடிதொடை தூக்கொ

டிழுக்கா மரபின் இவற்றொடு பிறவு

மொழுக்கல் வேண்டு முணர்ந்திசி னோரே.

1

தூக்கும் பாட்டும் பாவு மொன்றென

நோக்கிற் றென்ப நுணங்கி யோரே.

2

உயிரீ ராறே மெய்ம்மூ வாறே

அம்மூ வாறு முயிரோ டுயிர்ப்ப

இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே.

3

குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை யளபெடை மூன்றென் றறையல் வேண்டும்.

4