உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சிவகர்ணாமிர்தம் (1885) இவைகளை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தெழுதினார்.

இயேசுமத சங்கற்ப நிராகரணம் (1879), சிதம்பர சபாநாத புராணம் (1885), இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு (1894), சித்தாந்த மரபு கண்டன கண்டனம் (1898), திராவிடப்பிரகாசிகை (1899), திருச்சிற்றம் பலயமக அந்தாதி, திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, மாவை யந்தாதி, நல்லைச் சிவசுப்பிரமணியக் கடவுள் பதிகம், வைதீக காவிய தூஷண மறுப்பு முதலிய நூல்களையும் இயற்றினார்.

அமிர்தம் பிள்ளை (1845-1899)

முத்து வீரியம் என்னும் இலக்கண நூலை இயற்றிய உறையூர் முத்துவீரிய உபாத்தியாயரின் மாணவர் இவர். தமிழ்க் கவிஞர். ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவராக விளங்கினார். சேலம் அரசினர் கல்லூரியில் நெடுங்காலம் தமிழாசிரியராக இருந்தார். 1886– இல் திருச்சிராப்பள்ளி எஸ். பி. ஜி. கல்லூரியில் தமிழாசிரியராக அமர்ந்தார். “தமிழ்ச் செல்வம்” என்னும் பத்திரிகையை 1888-முதல் 1892 வரையில் நடத்தினார்.

இவர் இயற்றிய நூல்கள்: யாப்பிலக்கண வினாவிடை, தமிழ்விடுதூது. பெண்மை நெறிவிளக்கம், இது 200 வெண்பாக்களால் ஆனது.

ஆதிவயலூர் வெண்பாவந்தாதி முதலிய நூல்களை இயற்றிய சுந்தரநாதம் பிள்ளை இவருடைய மகனார்.

சோமசுந்தர நாயகர் (1846-?)

சென்னையில்

சூளை என்னும் இடத்தில் இருந்தார். அச்சுதாநந்த சுவாமியிடம் தமிழ், வடமொழிகளைப் பயின்றார். ஆங்கிலம், தெலுங்கு மொழிகளையும் பயின்றவர். மாயாவாதியாக இருந்த தமது குருவான அச்சுதானந்த சுவாமியைச் சைவ சித்தாந்தி யாக்கினார். முத்து வீரியம் என்னும் இலக்கணநூலை இயற்றிய முத்து வீரிய உபாத்தியாயரிடத்திலும் இலக்கணம் இலக்கியம் கற்றார். “நாகை நீலலோசனி”, “திருச்செங்கோடு விவேகதிவாகரன்” பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். சைவ சிந்தாந்த விரிவுரைகள் நிகழ்த்தினார்.