உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

அருணகிரி நாதர் புராணம், பதிகச் சதகம், சதகப் பதிகம், திருச் செந்தூர்த் திருப்புகழ், திருச்செந்தூர்க் கோவை திருவாமாத்தூர்த் தலபுராணம்.

திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906)

யாழ்ப்பாணத்துச் சுழிபுரம் இவரூர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் மாணவர். இவர் இயற்றிய நூல்கள்: மாணிக்கப் பிள்ளைாயர் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா சில தனிச் செய்யுட்கள். கணபதி பிள்ளை (?-1895)

யாழ்ப்பாணத்துப் புலோலி இவர் ஊர். அ. சிவசம்புப் புலவரிடம் தமிழ் பயின்றார். வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கலாசாலை, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராக இருந்தார். சென்னைத் திராவிட வர்த்தனி சங்கத்தின் பண்டிதராக இருந்தார்.

இவர் இயற்றிய நூல்கள். வேதாரணியேசுவரர் ஊஞ்சற் பதிகம். வில்ஹணீயம் என்னும் நூலை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார். இரகுவமிசசுருக்கம். இந்திரசேனை நாடகம் என்னும் நூல்களை எழுதினார். வடமொழி நூலாகிய மான்மி யத்திலிருந்து வாரபுரேசர் (மாணிக்க வாசகர்) கதையை மொழி பெயர்த்தார்.

இரகுவமிசம் மொழிபெயர்ப்பு, மார்க்கண்டேய புராணம், தருக்க சாஸ்திர வினாவிடை, பதப்பிரயோக விவரணம் என்னும் நூல்களையும் எழுதினார். இவை அச்சிடப்படவில்லை. வயித்தியலிங்கம் பிள்ளை (1842-1900)

யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறை என்னும் ஊரில் பிறந்தவர். உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடத்தில் தமிழ் பயின்றார். தருக்கம், சோதிடம், வானநூல்களையும் கற்றவர். 'சைவாபிமானி' என்னும் பத்திரிகையை நடத்தினார்.

இவர் இயற்றிய நூல்கள்: சிந்தாமணி நிகண்டு, செல்வச் சந்நிதிமுறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதி நிர்ணய புராணம். கல்வளையந்தாதி. கந்தர் அலங்காரம் ஆகிய இந்நூல்களுக்கு உரை எழுதினார். கந்தபுராணத்தில் தெய்வயானை திருமணப்படலம், வள்ளியம்மை திருமணப்படலம், அண்டகோசப்படலம் ஆகிய மூன்று படலங்களுக்கு உரை எழுதினார். சிவராத்திரி புராணத்தை 1881-ஆம்