உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு சலச லோசனச் செட்டியார் (1876-1897)

211

இவர், திருவெவ்வளூர் இராமசாமி செட்டியார் என்னும் புலவரின் மகனார். இராமசாமி செய்டியார் திருவிடை மருதூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றக் கலம்பகம் முதலிய நூல்களை ப இயற்றியவர். இவருடைய மகனாராகிய சலசலோசனச் செட்டியார் இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இளமையில் தந்தையாரிடம் கல்வி பயின்றபிறகு. சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார். அக்காலத்தில் அக்கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராக இருந்த பரிதிமாற் கலைஞர் என்னும் சூரியநாராயண சாஸ்திரியாரிடம் தமிழ் கற்றார். ஆசிரியருக்கும் மாணவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

பரிதிமாற் கலைஞர், தம் தமிழாசிரியராகிய மதுரைச் சபாபதி முதலியார் இயற்றிய குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழை அரங்கேற்றுவதற்காக வடகரை ஜமீன்தார் இராமபத்திர நாயுடு அழைப்பிற்கிணங்கி பெரியகுளம் சென்றார். சென்றவர், ஜமீன்தாரின் வற்புறுத்தலினால் அங்கேயே சில நாட்கள் தங்கிவிட்டார். அப்போது, மாணவராகிய சலசலோசனர், விரைவில் வரவேண்டும் என்னும் குறிப்புடன் தமது ஆசிரியருக்கு ஒரு வெண்பா எழுதி அனுப்பினார். அந்த வெண்பா இது:

"செல்வமலி குளந்தைச் சேயின் தமிழ்விரிப்பச் செல்வலெனச் சென்றாய் தேசிகவான்-கல்விவயிற் போந்தவன் தாழ்ப்பப் புலம்புகொண் டிற்கணுறை ஏத்திழையை நேர்குவல்யான் எண்'

"

99

இவர் இயற்றிய நூல்கள்: திருவெவ்வளுர் வினாயகர் மீது பதிகம், சாவித்திரி சரிதை, சரசாங்கி என்பன. சரசாங்கி என்பது, ஷேக்ஸ்பியர் என்னும் நாடகக் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதிய சிம்பலின் என்னும் நாடகத்தைத் தழுவித் தமிழ் நடைக்கேற்ப அமைத்து எழுதப்பட்டது. சலசலோசனர் தாம் எழுதிய சரசாங்கி நாடகத்தைப் பம்மல் சம்பந்த முதலியாருடன் சேர்ந்து நடித்தார்.

இவர் தமது இருபத்தொன்றவது வயதில் காலஞ் சென்றது வருந்தத்தக்கது. இவர் காலஞ்சென்றது பற்றி இவரது ஆசிரியர் பரிதிமாற் கலைஞர் இவர். மீது ஐந்து கையறுநிலைச் செய்யுட்கள் பாடினார். அவற்றில் இரண்டு செய்யுட்கள் இவை: