உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

எல்லிஸ் துரையின் நண்பர். எல்லிஸ் துரையவர்கள் இவர்மேல் ஒரு செய்யுள் இயற்றினார். என்பதை முன்னமே கூறியுள்ளோம். மேற்படி கல்விச் சங்கத்தின் தமிழ்ப் புலவராக இருந்தார். அச்சங்கத்தில் மற்றொரு புலவரான தாண்டவராய முதலியாரும் இவரும் சேர்ந்து வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியை 1824-ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பித்தார்கள். இதனைப் பின்வரும் வாக்கியங்களினால் அறியலாம்.

“பின்னர்,

தோலா விறலுள கோலா னரசுசெய்

மேலா னிசை திகழ் நாலாம் ஜார்ஜ் நாளில் நன்றா மனுமுறை குன்றா வகையிவண் மன்றோ வதிபதி நின்றாளுகையில்.

கிறிஸ்து 1872-ஆம் வருஷத்துக்குச் செல்லாநின்ற சகவருஷம் 1746-இல் நிகழா நின்ற தாரண வருஷத்தில் மேற்சொல்லிய சங்கத்துத் தலைவராகிய ஸ்ரீ ரிச்சார்டு கிளார்க்குத் துரையவர்களனு மதிப்படி தமிழ்ச் சங்கத்தலைமைப் புலமை நடத்துந் தமிழ்ப் பண்டிதர்களாகிய தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர் இவர்களால் சதுரகராதியில் மற்றைப் பெயர் தொகை தொடை என்னுமிம் மூன்றகராதிகளும் பரிசோதிக்கப்பட்டுக் கல்விச் சங்கத்துத் துரைகளால் மேற்சொல்லிய சென்னைச் சங்கத்தி லச்சிற் பதிப்பிக்கப்பட்டன.’ (1860-இல் அச்சிடப்பட்ட சதுரகராதி முகவுரை.)

وو

இராமச்சந்திர கவிராயர் சகுந்தலை விலாசம், தாருக விலாசம், இரங்கூன் சண்டைநாடகம், இரணிய வாசகப்பா, மகாபாரத விலாசம் என்னும் நூல்களை இயற்றினார். இவர் இயற்றிய சகுந்தலை விலாசத்தை G. Deverze என்பவர் 1886-87-இல் பிரெஞ்சு பாஷையில் மொழிபெயர்த்தார்.

இராமசாமி ஐயர்

இசைப்புலவராக இருந்த மகா வைத்தியநாத ஐயரின் தமயனார் இவர். இயற்றமிழ் இசைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: திருச்செந்தில் சந்தவிருத்தம். திருச்செந்தில் யமக வந்தாதி, பெரிய புராணம் கீர்த்தனை, பார்வதி சரித்திரக் கீர்த்தனை பெரிய புராணக் கீர்ததனையைத் திருவாவடுதுறை மடத்தில் அம்பலவாண தேசிகர், சுப்பிரமணிய தேசிகர், மகாவித்து வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலியோர் முன்னிலையில் இவர் அரங்கேற்றினார்.

"