உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

நவி லெழுபதுக் கெழுப தேழு மூன்றா

நல்ல கலியாண்டு கன்னி மதிப் பூசத்தில்

புவி புகழுங் குடந்தைக் கோமள வல்லிப்

பொன்புணரு மெங்கள் சாரங்கபாணி கோயிற்

கவிவாதி சிங்கார மண்டபத்தின் முன்னே

கவியனந்த தேவ னரங் கேற்றினானே.

217

இந்நூல் சென்னை அரசாங்கத்துக் கீழ்நாட்டுக் கையெழுத்துப் புத்தக சாலையில் இருக்கிறது.

ஆறுமுகத் தம்பிரான்

சோழநாட்டுக் கருவூரில் பிறந்தவர். தருமபுர ஆதீனத் தம்பிரான்களில் ஒருவர். தருமபுர மாகவித்துவான் என்னும் சிறப்புப் பெயர் உள்ளவர். தென்னாடு, வடநாடு, ஈழநாடு என்னும் நாடுகளில் தலயாத்திரை செய்தவர். இவர் எழுதிய பெரிய புராண உரை 1885- 1889-ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டது.

சென்னையில் இவர் தங்கியிருந்தபோது வெஸ்லியன் மிஷன் பாதிரிமாரால் ஞானஸ்னானம் பெற்றுக் கிறிஸ்துவரானார். இது நிகழ்ந்தது கி.பி. 1836-ஆம் ஆண்டில். கிறிஸ்துவர் ஆன பிறகு இவருக்கு வெஸ்லி அப்ரகாம் என்று பெயர் ஏற்பட்டது. கிறிஸ்துவர் ஆனபிறகு இவர் எழுதிய நூல்கள்: அஞ்ஞானக்கும்மி, அஞ்ஞானம், இரட்சகர் அவதாரம், செகவுற்பத்தி, நரகம், மோட்சம், வாழ்த்து.

ஆறுமுகம் பிள்ளை

பூலாருசுவாமிப் பிள்ளையின் மகனார் இவர், இவரைப் பற்றிய செய்திகள் தெரியவில்லை. அரிச்சந்திர வெண்பா, மதுரை யமக வந்தாதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய அரிச்சந்திர வெண்பா, பச்சையப்பன் கல்விச்சாலையில் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய திருமயிலை முருகேச முதலியாரால் 1884-ஆம் ஆண்டில் அஷ்டலக்ஷ்மி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

இராமச்சந்திர கவிராயர்

இவரூர் இராசநல்லூர் சென்னைப்பட்டினத்தில் வாழ்ந்தார். சென்னைக் கல்விச் சங்கத்துப் போர்டு மெம்பரும் தமிழ் அறிஞருமான