உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சமீன்தாரின் புலவராக இருந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: சங்கர நாராயணகோயில் திரிபந்தாதி, நவநீத கிருட்டினன் பிள்ளைத் தமிழ், காவடிச்சிந்து.

ப. அரங்கசாமி பிள்ளை

புதுக்கோட்டை அரசரிடம் வித்துவானாயிருந்த ப. முருகேச கவிராயருடைய தம்பியார் இவர். இவரைப் பற்றிய செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி காவியத்தின் முதற்பகுதியை (பதுமையார் இலம்பகம் வரையில்) அச்சிட்டார். அதாவது, டாக்டர் உ.வே. சாமிநாதையர் அச்சிடுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே அச்சிட்டார். 'இது சென்னபட்டணம் அஷ்டலஷ்மி விலாச அச்சுக்கூடத்தில் சாலிவாகன சகாப்தம் 1805- ஆம் வருஷத்தில் செல்லா நின்ற சித்திரபானு வருசம் பங்குனி மாதம் கி.பி.1883-இல் அச்சிடப்பட்டது.'

இராஜகோபாலபிள்ளை,

சென்னை இராஜதானி வித்தியாசாலைத் தமிழ்த் தலைமைப் பண்டிதராயிருந்த சீனிவாச ராகவாச்சாரியார், சென்னைப் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சருவகலாசாலைத் தலைமைப் புலவர் கோமளபுரம் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை மாணாக்கர் வேங்கட சுப்புபிள்ளை ஆகியோர் இந்தப் பதிப்புக்குச் சாற்று கவிகள் வழங்கியிருக்கிறார்கள்.

அரிகிருட்டின படையாட்சி

இவர் வரலாறு தெரியவில்லை. “தமிழ் சுருக்கெழுத்து” என்னும் நூலை எழுதி கும்பகோணத்தில் 1898-இல் அச்சிற் பதிப்பித்தார். அனந்த தேவன்

உத்தர ராமாயணத்தை எழுதியவர் இவர். இந்த நூலைக் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோவில் சிங்கார மண்ட பத்தில் கலி ஆண்டு 4910-இல் (கி.பி. 1810-இல்) அரங்கேற்றினார் என்று கீழ்க்கண்ட செய்யுளினால் தெரிகிறது.

கவிதிலகர் வான்மீகி சொலு மிராம

காதை யேழாங் காண்டம் நாடகமாய்ச் செய்தே