உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

முகுளம்

முகுள மென்பது மொழியுங் காலை யைந்து விரலும் தலைகுவிந் தேற்ப வந்து நிகழு மாட்சித் தாகும்.

303

27

பிண்டி

பிண்டி யென்பது பேசுங் காலைச்

சுட்டுப் பேடிய நாமிகை சிறுவிர

லொட்டி நெகிழ முடங்க வவற்றின்மிசை

விலங்குறப் பெருவிரல் விட்டுங் கட்டியு

மிலங்குவிரல் வழிமுறை யொற்றலு மியல்பே.

28

தெரிநிலை

தெரிநிலை யென்பது செப்புங் காலை

யைந்து விரலு மலர்ந்துகுஞ் சித்த

கைவகை யென்ப கற்றறிந் தோரே.

மெய்ந்நிலை

மெய்ந்நிலை யென்பது விளம்புங்காலைச் சிறுவிர லநாமிகை பேடொரு சுட்டிவை

யுறுத லின்றி நிமிரச் சுட்டின் மிசைப் பெருவிரல் சேரும் பெற்றித் தென்ப.

உன்னம்

உன்ன நிலையே யுணருங் காலைப்

பெருவிரல் சிறுவிர லென்றிவை யிணைய வருமுறை மூன்று மலர்த்துநிற் பதுவே.

மண்டலம்

மண்டல மென்பது மாசறக் கிளப்பிற் பேடு நுனியும் பெருவிர னுனியுங் கூடி வளைந்துதம் முகிர்நுனை கௌவி யொழிந்த மூன்று மொக்க வளைவதென மொழிந்தன ரென்ப முழுதுணர்ந் தோரே.

29

30

31

32