உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

சரவணப் பெருமாளையர்

திருத்தணிகை சரவணப் பெருமாளையர் என்று கூறப்படுவார். விசாகப் பெருமாளையர் இவருடைய தமையனார். இவ்விருவரும் திருத்தணிகை கந்தப்பையரின் பிள்ளைகள். வீரசைவ மரபினர். இவர்களுக்கு விசாகப்பெருமாள் சரவணப்பொருமாள் என்று பெயர் இட்டதற்கு ஒரு காரணம் கூறுவது உண்டு. அஃது என்ன வென்றால் கூறுதும்:

திருத்தணிகை கந்தப்பையர் திருத்தணிகையில் வாழ்ந்திருந் தார். இவர் வீரசைவர். இவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. இவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லாமையால் திருத்தணி முருகனை வேண்டிக் கொண்டனர். பிள்ளைப்பேறுண்டாகவில்லை. பிறகு இவ்விருமனைவியரும் திருப்பதிப் பெருமாளை வேண்டிக் கொண்டனர். பிறகு இவர்களுக்குப் பிள்ளைப்பேறுண்டாயிற்று. பிள்ளைகளுக்குப் பெயரிடும்போது தணிகைமலை முருகன் பெயரைச் சூட்டக் கந்தப்பையர் விரும்பினார். ஆனால், மனைவிமார் அதற்கு ணங்கவில்லை. திருமால் திருவருளால் பிறந்த பிள்ளைகள் ஆதலால் பெருமாள் பெயரைச் சூட்டவேண்டும் என்று பிடிவாதம் செய்தார்கள். வீரசைவராகிய கந்தப்பையர் என்ன செய்வதென்று சிந்தித்தார்.

மனைவியரையும் திருப்திப் படுத்தித் தமது சைவக்கொள்கை யையும் நிலைநிறுத்தி அப்பிள்ளைகளுக்குச் சரவணப்பெருமாள், விசாகப் பெருமாள் என்று பெயரிட்டார். சரவணன், விசாகன் என்பன முருகனுடைய பெயர்கள், பெருமாள் என்பது சிறப்பாகத் திருமாலுக் குரியபெயர். ஆனால், அப்பெயர் முருகனுக்கும் வழங்குவது உண்டு. திருப்புகழ்ப் பாக்களில் முருகன், பெருமாள் என்று கூறப்படுவது காண்க, பெருமாள் என்னும் பெயரைச் சூட்டியபடியால் மனைவியர் மகிழ்ச்சியடைந்தார்கள். முருகன் பெயரைச் சூட்டியபடியால் கந்தப் பையர் மகிழ்ச்சியடைந்தார்.

சரவணப்பெருமாளையர், இயற்றமிழாசிரியர் இராமாநுச் கவிராயரிடம் கல்வி பயின்றார். இவர் இயற்றிய நூல்கள்: குளத்தூர்ப் புராணம், கோளதீபிகை, அணியியல் விளக்கம். இயற்றமிழ்ச் சுருக்கம், இலக்கணச் சுருக்க வினாவிடை. திருவாசகத்தை அச்சிற் பதிப்பித்தார். 1857, நைடதத்தை 1842-இல் அச்சிற்பதிப்பித்தார்.