உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

பயின்றார். எட்டையபுரம் அரசரிடத்தில் வித்துவானாக இருந்தார். காவடிச்சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் இவருடைய மாணவர்.

விருதை சிவஞான யோகியார், சி. சுப்பிரமணிய பாரதியார், மு. ரா. அருணாசலக் கவிராயர். மு. ரா. கந்தசாமிக் கவிராயர், சே. ரா. சுப்பிரமணியக் கவிராயர் முதலியோர் இவருடைய நண்பர்கள்.

இராசவல்லிபுரம் முத்துசாமிப்பிள்ளைமீது வண்டுவிடுதூது, பயோதரப்பத்து என்னும் நூல்களைப் பாடினார். எட்டையபுரம் ண்டியப்பபிள்ளை மீது பிள்ளைத்தமிழ், உதாரசோதனை மஞ்சரி பாடினார். பல தனிநிலைச் செய்யுட்களைப் பாடினார். கழுகு மலைத் திரிபந்தாதி திருப்பரங்கிரிப் பதிகங்கள், குதிரைமலைப் பதிகம் முதலிய நூல்களையும் இயற்றினார்.

முகமது காசிம் இபின் ஸித்தீக் லப்பை

இலங்கையில் இருந்தவர். இவர் வரலாறு தெரியவில்லை. கீழ்க்கண்ட நூல்களை எழுதி அச்சிட்டிருக்கிறார். அல்ஹிதாயத் அல்காஸீமியத், கண்டி 1891. இது அரபிபாஷை இலக்கணத்தைத் தமிழில் எழுதப்பட்டநூல். கிதாப் அல்ஹிஸாப். கண்டி 1891, இது கணக்கு நூல். தூர்ஃபத் அல்நஃவ். இது அரபு பாஷையின் இலக்கணச் சுருக்கம், கண்டி 1891. உஸுல் அல்கிரா அத் அல் அராபியத். இது சிறுவர்களுக்குரிய அரபி வாசக புத்தகம், தமிழ் விளக்கத்துடன். கண்டி, 1891. ஞானதீபம், கண்டி 1892. தமிழ் முதற்புத்தகம், கொளும்பு 1892, அஸ்றாறுல் ஆலம். சயன்ஸ் சாத்திரம். கொளும்பு 1897.

முத்துக்கிருஷ்ண பிரமம்

இவர், சுத்த அத்வைத வேதாந்தாசாரியாராகிய முத்துராமப் பிரம தேசிகருடைய மருகர். மேற்படியாரின் திருக்கூட்டத் தலைவரில் இளவரசுப்பட்டம் பெற்றவர். திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள் இயற்றிய நிட்டாது பூதி என்னும் நூலுக்கு இவர் உரை எழுதியிருக் கிறார். அந்த உரை, சென்னைப் பூமகள் விலாச அச்சுக்கூடத்தில் 1875- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. அவ்வுரைக்கு அக் காலத்திலிருந்த வித்துவான்களில் சிலர் 'சாத்துக் கவிகள்' அளித்துள்ளனர். அவர் களின் பெயர் வருமாறு: