உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

327

கோவிலுக்குக் கிடைத்த வரகுண பாண்டியனுடைய நூல் நிலையத்து ஏட்டுச்சுவடிகள் காலப்போக்கில் கவனிப்பார் அற்றுச் சிதிலமாய்ப் போயின. சில காலத்துக்குப் பிறகு அந்தச் சுவடிகள் கோவில் கணக்கு ஏட்டுச் சுவடிகளுடன் கலந்துவிட்டனவாம். பிற்காலத்தில் அந்த ஏட்டுக் குப்பையை ஒமத்தீயில் எண்ணெயில் தோய்த்துக் கொளுத்திவிட்டார்

களாம்.

1889ஆம்

ம் ஆண்டில் உ.வே. சாமிநாதய்யர், பால் வண்ண நாதர் கோயில் ஏட்டுச்சுவடிகளைப் பார்ப்பதற்குக் கரிவலம்வந்த நல்லூருக்குப் போனாராம். போய்க் கோவில் தர்மகர்த்தாவைக் கண்டு பேசினாராம். அதற்குத் தர்மகர்த்தா சொன்ன விடை இது:

66

குப்பைகூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கூளங்களையெல்லாம் ஆகமத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள். பழைய ஏடுகளைக் கண்ட இடங்களில் போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்.

இது தெரிந்த செய்தி; தெரியாத செய்திகள் எத்தனையோ!

மதுரைத் தமிழ்ச் சங்கத்து நூல்நிலையத்தில் இருந்த ஏட்டுச் சுவடிகளில் பல, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்னர் தீப்பிடித்து எரிந்துபோயின. அவற்றில் அச்சில் வராத சிலபல ஏட்டுச்சுவடிகளும், இருந்தனவாம். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பத்து உரைகளும், அதில் இருந்தனவாம்: வேறு அருமையான நூல்களும் இருந்தனவாம்.

ஆற்று வெள்ளத்தில் ஏட்டுச்சுவடிகள்

பதினெட்டாம் பெருக்கு ஆற்று வெள்ளத்தில் போடப்பட்ட ஏடுகள் எத்தனை என்று கணக்குச் சொல்லமுடியாது. கவிராயர்கள், புலவர்கள், வித்துவான்களின் வீடுகளில் இருந்த ஏட்டுச்சுவடிகள், அவர்கள் பரம்பரையில் வந்த படிப்பில்லாத முழுமக்களிடம் சிக்கி விடும். கல்வி வாசனையற்ற அவர்கள் அந்த நூல்களின் அருமை பெருமைகளை அறியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும், இடத்தை அடைத்துக்கொண்டு வீணாகக் கிடக்கிறதே என்ற கவலையுடன் அவற்றைக் கொண்டு போய் ஆற்று வெள்ளத்தில் போட்டுவிடுவார்கள். இவ்வாறு நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள்.

ம்

1890ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஏட்டுச்சுவடிகளைத் தேடிக்கொண்டு டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் திருநெல்வேலிக்குச்