உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

அல்லாடிக்கொண்டிருந்த மக்கள், நூல்களைப் போற்றிவைப்பதில் எவ்வாறு கவலைகொள்ள முடியும்? சமயப் பகைமைகளுக்கும் செல்லுக்கும் சிதலுக்கும் உயிர் தப்பி எஞ்சியிருந்த அருமையான சில நூல்கள், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த அரசியற் குழப்பத்திலே பெரிதும் மறைந்து விட்டன.

இவ்வாறு சில முக்கியக் காரணங்களினாலே பல தமிழ் நூல்கள் மறைந்துபோயின. எத்தனை நூல்கள் மறைந்து போயின என்பதைக் கணக்கிட முடியாது. உரையாசிரியர்களும், நூலாசிரியர் களும், சாசனங்களும், குறிப்பிட்டுள்ள மறைந்துபோன நூல்களைப் பற்றிதான் அறிய முடியும்; குறிப்பிடப்படாமல் மறைந்துபோன நூல்களை நாம் அறிவதற்கு வழியில்லை.

இப்பொழுதுங்கூடச் சில நூல்கள் ஏட்டுப் பிரதிகளாகவே உள்ளன. அவைகளைக் கண்டுபிடித்து விரைவில் அச்சிட்டு வெளிப்படுத்தா விட்டால், அவையும் மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஆட்சியா ளரும் நாட்டவரும் இதில் கருத்துச் செலுத்தி ஆவன செய்வார்களாக.

  • * *