உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எகர ஒகர எழுத்துக்களின் வரிவடிவ

வரலாறு

(இந்நூல் 194-ஆம் பக்கத்தில் கூறிய எகர ஒகர எழுத்து என்பது பற்றிய தொடர்புரை)

எழுத்துக்கள் எல்லாம் எக்காலத்திலும் ஒரே விதமாக எழுதப்படவில்லை. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக எழுதப்பட்டன. இவ்வெழுத்துக்களில் எகர ஒகர எழுத்துக்களின் வரிவடிவங்கள் எவ்வாறெல்லாம் எழுதப்பட்டன என்பதை இங்கு ஆராய்வோம்.

இந்த எழுத்துக்களின் உருவ அமைப்பைப் பற்றி இலக்கண நூல்களிலே சூத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மெய் எழுத்துக்களும் எகர ஒகர உயிரெழுத்துக்களும் புள்ளிபெறும் என்று அச் சூத்திரங்கள் கூறுகின்றன.

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்

எகர ஒகரத் தியற்கையும் அற்றே.

என்பன தொல்காப்பிய எழுத்ததிகாரம் 14. 15-ஆம் சூத்திரங்களாம்.

கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கணம்.

எகர ஒகர மெய்யிற் புள்ளிமேவும்.

என்று கூறுகிறது. (எழுத்ததிகாரம் 3-ஆம் செய்யுள்.)

கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் இலக்கணம்.

தொல்லை வடிவின்

எய்தும் எகர ஒகர மெய் புள்ளி.

எல்லா எழுத்தும் ஆண்டு