உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாற்றுக் கவிகள்

ஓர் ஆசிரியர் புதிதாக நூல் இயற்றினால் அந்நூலுக்குப் பாயிரம் அமைப்பது பண்டைக் காலத்து வழக்கம். இப்போதும் அவ்வழக்கம் உண்டு. பாயிரம் இல்லாத நூல் நூலன்று. நூலுக்குப் பாயிரம் இன்றி யமையாதது.

66

"ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே

என்பது சூத்திரம். பாயிரம் வழங்குவோர் நூலாசிரியரின் ஆசிரியரும், அவருடன் பயின்றவரும், அவர் மாணாக்கரும் ஆகிய மூவரில் ஒருவராக இருப்பர். நூலுக்கு உரை எழுதும் உரையாசிரியரும் பாயிரம் கூறுவர்.

சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே, ஏட்டுச் சுவடியாக இருந்த பழய நூல்களை அச்சுப் புத்தகமாக அச்சிட்டவரும், புதிதாக நூல்களை இயற்றி அச்சிற் பதிப்பித்தோரும், தம்முடன் பயின்றவர், தம் நண்பர், தம் ஆசிரியர், தமது மாணவர் முதலியவர்களிடமிருந்து சாற்றுக் கவிகளைப் பெற்றுத் தமது நூலில் அச்சிட்டனர். 19-ஆம் நூற்றாண்டில் நூல்களை அச்சிட்ட புலவர்கள் பெரும்பாலோரும் தம் நூல்களில் சாற்றுக் கவிகளை அச்சிட்டனர். சாற்றுக் கவிகள் இல்லாத நூல்கள் அக் காலத்தில் மிகச்சில. சாற்றுக்கவி அச்சிடும் வழக்கம் இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்துவந்தது. பிறகு அடியோடு மறைந்து போயிற்று. சாற்றுக் கவியைச் சிறப்புப் பாயிரம் என்றும் கூறுவர்.

சாற்றுக் கவி என்பது சாத்துக் கவி என்றும் கூறப்படும். சாற்றுக் கவி சாத்துக் கவி என்னும் சொற்கள் சார்த்துக்கவி என்பதன் மரூஉபோலும். சாற்றுக் கவிகள் எல்லாம் செய்யுளாகவே இருந்தன. அக்காலத்தில் புலவர்கள் எல்லோரும் செய்யுள் இயற்ற அறிந்தி ருந்தனர். செய்யுள் இயற்றத் தெரியாதவர் அக்காலத்தில் புலவராகப், பண்டிதராகக் கருதப்பட்டிலர். நினைத்தவுடன் எளிதாகச் செய்யுள்