உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

287

பள்ளிக்கூடம் கோவிந்த உபாத்தியாயர், தானப்ப கவுண்டர், சின்னப்பாவு மூர்த்தியார், நாராயணப் பிரமம் ஆகியோர், இவ்வுரை நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியவர், வித்துவசிகாமணியாகிய அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள். இதனால் இவர்கள் ஒரே காலத்தில் இருந்தவர் என்பது தெரிகின்றது.

வல்லூர் தேவராசப் பிள்ளையவர்கள் சூதசங்கிதை என்னும் நூலை மொழிபெயர்த்து 1856-ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தார். இந்த நூலுக்குப் பலர் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளனர். அவர்கள் பெயர் வருமாறு:

திரிசிரபுரம் வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் குமாரர் சாமிநாத தேசிகர், நாகவெளிப் பாளையம் வள்ளல் சந்தானம் சண்முக தேசிகர், தஞ்சை அண்ணாமலைப் பிள்ளை, திரிசிரபுரம் வீரராகவ செட்டியார், மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கருளொருவரும் உபாத்தியாயர் திரிசிரபுரம் சிதம்பரம் பிள்ளையவர்கள் குமாரருமாகிய சுந்தரம்பிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், தியாகராஜ செட்டியார், திரிசிரபுரம் குப்பமுத்தாப்பிள்ளை, திரிசிரபுரம் வித்துவ சிரோமணி மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கரிலொருவராகிய திருவீழிமிழலை இராமாயணப் பிரசங்கம் சாமிநாதக் கவிராயர், தாரா நல்லூர் வீராச்சாமி நாயகர், திரிசிரபுரம் அப்பாவுப் பிள்ளை என்கிற முத்துசாமிப் பிள்ளை, கெம்புவேலை அழகிரிசாமி நாயகர், கோவிந்தசாமிப் பிள்ளை, திரிசிரபுரம் முருகப் பிள்ளை, திரிசிரபுரம் நீலகண்டப்பிள்ளை, திரிசிரபுரம் சரவண உபாத்தியாயர், உறையூர் சின்னையப் புலவர், மதுரை வீரபத்திரப் பிள்ளை, வித்வசிரோமணி காஞ்சீபுரம் கச்சபாலைய ஐயர், ஆறைமாநகர் முத்தமிழ்க் கவி திருவேங்கடப் பிள்ளை, ஆறைமாநகர் ஐயாசாமி முதலியார், கவித்வ பரிசீலக கஜகண்டீரவம் ஆ. நமச்சிவாய முதலியார், கலியாணபுர மென்னும் பெங்களூர் சதுர்வேத சிந்தாந்த சபையைச் சேர்ந்த தமிழ் வித்தியாசாலை முதலுபாத்தியாயர், காஞ்சீபுரம் இராமாநுஜ பிள்ளை, மெய்யூர் பொன்னம்பல நாயகர், காஞ்சீபுரம் பாரதப் பிரசங்கம் சாமையரென்கிற இரகுநாதய்யர், புன்னைப்பாக்கம் சுப்பராய முதலியார், தண்டலம் சிதம்பர முதலியார், காஞ்சீபுரம் சிங்காரவேலு பிள்ளை. இதனால் இவர் எல்லோரும் சமகாலத்தில் இருந்தவர் என்பது தெரிகின்றது.